நெல்லிக்காய் காரச்சட்னி இந்த மாதிரி செஞ்சீங்கன்னா 10 இட்லி கூட சாப்பிடலாம்!!
How to prepare Nellikai Kara chutney Recipe in tamil

நெல்லிக்காய் காரச்சட்னி இந்த மாதிரி செஞ்சீங்கன்னா 10 இட்லி கூட சாப்பிடலாம்!!
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவங்க ஜூஸ் போட்டு குடிப்பாங்க. ஆனால் ஜூஸ் ஜூஸ் குடிக்கிறதும் பிடிக்கலன்னா நெல்லிக்காய் வச்சு நெல்லிக்காய் சாதம், நெல்லிக்காய் ஊறுகாய் தேன் நெல்லிக்காய் இந்த மாதிரி செஞ்சு சாப்பிடலாம். ஆனா இன்னைக்கு நம்ம எல்லாத்தையும் விட ஒரு சூப்பரான நெல்லிக்காய் கார சட்னி செய்யப் போறோம். நல்லா காரசாரமா புளிப்பா இட்லி, தோசை கூட வச்சு சாப்பிட செம டேஸ்டா இருக்கும். சுட சுட சாதத்துல கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். இதுல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்துவிடலாம்.
வெரைட்டி சாதங்களுக்கு இந்த சட்னியை சைடு டிஷ்ஷாவும் வச்சுக்கலாம். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நாலஞ்சு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க. இட்லி தோசைக்கு ஒரு சேர்த்தே காமினேஷன் எப்பவும் ஒரே மாதிரியா தேங்காய் சட்னி, காரச் சட்னி, பூண்டு சட்னி செய்யாம உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய வைட்டமின் சி அதிகமா நிறைந்த உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய நெல்லிக்காய் வச்சு இந்த மாதிரி நெல்லிக்காய் கார சட்னி செஞ்சு பாருங்க. நெல்லிக்காய் சாப்பிடாமல் அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி காரச் சட்னியில் சேர்த்து அரைத்து கொடுத்துட்டா அதுல என்ன இருக்குன்னு தெரியாம குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி தான் நம்ம செஞ்சு கொடுக்கணும். இந்த சுவையான நெல்லிக்காய் கார சட்னி ரெசிபி கண்டிப்பா நீங்க உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. நெல்லிக்காய் விலை ரொம்ப ரொம்ப குறைவுதான் ஆனா அதுல இருக்குற ஆரோக்கியங்கள் அதிகம். அதனால கண்டிப்பா இதை செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த சுவையான நெல்லிக்காய் கார சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
.இதுல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்துவிடலாம். வெரைட்டி சாதங்களுக்கு இந்த சட்னியை சைடு டிஷ்ஷாவும் வச்சுக்கலாம். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நாலஞ்சு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க. இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான காமினேஷன்.
தேவையான பொருட்கள்
3 நெல்லிக்காய்
2 தக்காளி
6 வர மிளகாய்
2 பெரிய வெங்காயம்
1 கொத்து கறிவேப்பிலை
1 துண்டு புளி
1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
உப்பு தேவையான அளவு
4 பல் பூண்டு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கியதும் நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். அனைத்தையும் ஆறவைத்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து விட்டால் சுவையான நெல்லிக்காய் கார சட்னி தயார்.
What's Your Reaction?






