பிரமாண்டமாக தொடங்கிய ’மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு; ஒரு மாதம் விரதம் இருந்து நடிக்கும் நயன்தாரா! - MOOKUTHI AMMAN 2
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஜனரஞ்சகமான காமெடி திரைப்படமாக உருவான மூக்குத்தி அம்மன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாராவின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகிறது. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று கோயில் செட் போடப்பட்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுவாக தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, இன்று மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் கலந்து கொண்டார். இன்று பட பூஜையில் பேசிய ஐசரி கணேஷ், நயன்தாரா முக்குத்தி அம்மன் முதல் பாகம் போல இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடிக்க ஒரு மாதம் விரதம் இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள ரெஜினா, இனியா, நடிகர்கள் துனியா விஜய், யோகிபாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டனர்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
ஹிப் ஹாப் ஆதி இசையில் சுந்தர்.சி இயக்கியுள்ள ஆம்பள, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடைசியாக சுந்தர்.சி இயக்கி 13 வருடங்களுக்கு பிறகு வெளியான ’மதகஜராஜா’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட பலர் கிரைப்பிபலங்களும் பங்கேற்றனர். விழாவிற்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள். அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் நயன்தாரா அரைமணிநேரம் தாமதமாகவே வந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர் கேரவனில் அமர்ந்து ரெடியானார் இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பொறுமையிழந்தனர். பததின் பூஜை நடக்கும் முனபே ஜெயம் ரவி தாணு ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி சென்றனர்.
பின்னர் 10.30 மணிக்கு விழாவிற்கு வருகை தந்தார் நயன்தாரா, பின்னர் படத்தின் பூஜை நடந்தது. தொடர்ந்து படத்தின் முதல் ஷாட்டும் படமாக்கப்பட்டது.
What's Your Reaction?






