அப்பா கவிதை - Appa Kavithai in Tamil

Collection of Appa Kavithai in Tamil, Appa kavithai for WhatsApp in Tamil, Appa vaazthukkal, Appa thina vaazthu, Thandhai kavithai

Oct 4, 2024 - 17:46
Oct 4, 2024 - 18:29
 0  148
அப்பா கவிதை - Appa Kavithai in Tamil

அப்பாவுக்கும் அன்பு
காட்ட தெரியும் என்பதை
அவர் தாத்தாவான
பின்பு தான் பார்த்தேன்


பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஓரே உயிர் அப்பா!


என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும் சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா!


தந்தையின் கடல் அளவு கோபம் கூட
நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது
தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்


உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் அன்னை
உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை


தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக
வாழ்க்கை முழுவதும் போராடும்
ஒர் உறவு அப்பா


சுயநலமான இந்த உலகத்தில்
சுயநலமற்ற ஒரு உறவு
அப்பா மட்டும் தான்


நான் எழுதும் தமிழ் கவிதையில்
நான் கண்ட மிக சிறந்த மூன்று
எழுத்து அப்பா


என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும் சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா


தாய்க்கு பின் தாரம் என்றால்
தந்தைக்கு பின் தந்தை மட்டுமே


விளையாட பொம்மை வாங்கித் தரும் அப்பாவை விட
விளையாட தானே பொம்மையாக மாறும்
அப்பாவை தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது


கண்ணில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும் ஒரே உறவு "அப்பா"


ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை
நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow