Letter Writing : அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டி; ரூ.50,000 பரிசு - பள்ளி மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு

Letter Writing Competition 2025 : பள்ளி மாணவர்கள் ரெடியா! தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கில, இந்தி என மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம். தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த போட்டி தேசிய அளவில் அஞ்சல் துறையின் மூலம் நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Jan 17, 2025 - 14:59
 0  6
Letter Writing : அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டி; ரூ.50,000 பரிசு - பள்ளி மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு

India Post Letter Writing Competition 2025 : தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரிடமும் இருந்தும் மறைந்து வருகிறது. கடிதம் எழுதுவதில் முக்கியதுவம் மற்றும் எழுத்து பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை (DHAI AKHAR Letter) நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடிதம் எழுதும் போட்டி
தகவல் தொடர்பியலில் மிக முக்கிய இடத்தில் இருந்தது கடிதம் ஆகும். தகவல் சொல்வதற்கு மட்டுமின்றி, எழுத்து பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு முறையாக கடிதம் இருந்தது. பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுவது குறித்து பாடங்களும் உள்ளன. பல்வேறு விதமான கடிதங்கள் உள்ளன. ஒருவரின் எழுத்து திறனை ஊக்குவிக்கும் முதல் கட்டமாக கடிதம் இருந்தது. ஆனால், ஆதித வளர்ச்சியில் இருந்து தொழில்நுட்பத்தின் காரணத்தினால், கடிதம் எழுதும் பழக்கம் மறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அதனின் முக்கியதுவத்தை அறியும் வகையில், இந்திய அஞ்சல் துறை ஒவ்வொரு ஆண்டும் கடிதம் எழுதும் போட்டியை தேசிய அளவில் நடத்தி வருகிறது.

எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தாண்டு ”எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளலாம்.


போட்டியில் கலந்துகொள்ளுவது எப்படி?
அஞ்சல் துறை வழங்கியுள்ள தலைப்பில் உள்நாட்டு கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கும் மிகாமலும், ஏ4 தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். 18 வயதிற்கு கீழ் அல்லது மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம். கடிதத்துடன் வயதிற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். கடிதங்களை தபால் மூலம் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்ப வைக்க வேண்டும்.


கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை அஞசல் துறை பொது மேலாளர்,
தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.


ரூ.50 ஆயிரம் பரிசு

  • இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
  • மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.

ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் கடிதம் எழுதும் போட்டியில் பங்குபெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow