பல லட்சம் உயிர்களை காவு கொண்ட 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami Ninaivu naal
பல லட்சம் உயிர்களை காவு கொண்ட 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
பல லட்சம் உயிர்களை காவு கொண்ட 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் சென்னை முதல் குமரி வரை அனுசரிப்பு!
: சுனாமி.. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு சொல் தமிழ்நாடு அறிந்தது இல்லை.. உலக நாடுகளே கூட சுனாமியின் கோரத்தாண்டவம் இவ்வளவு கொடூரமானதா? என அதிர்ந்ததும் அப்போதுதான்.. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரமான மூர்க்கத் தாக்குதலில் இந்தோனேசியா முதல் ஆப்பிரிக்கா வரை பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரமான நாள்.. சுனாமி.. இயற்கைப் பேரிடர்களில் பெருந்துயரைத் தரக் கூடியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலைகள் பல்லாயிரம் கிலோ மீட்டவர் வரை சீறிப் பாய்ந்தது. இந்தோனேசியா தொடங்கி இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளின் கடலோர மக்களை கொத்து கொத்தாக தன்னுள் கடல் அன்னை விழுங்கிக் கொண்ட நாள்.
300 ஆண்டுகளில் இல்லாதவகையில் கடல் அலைகள்- ஆழிப் பேரலைகளாக 30,40 அடி உயரத்துக்கு சீறிக் கொண்டு கடலோர கிராமங்களுக்குள் ஆவேசம் காட்டி நுழைந்து மனிதர்களையும் கட்டிடடங்களையும் அகப்பட்டதையெல்லாம் அள்ளிக் கொண்டு உள்வாங்கி திரும்பியது. இந்தியாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சுனாமியின் கோரத்தாண்டவத்தால் உயிரிழந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் ஒவ்வொரு கடலோர கிராமமும் சுனாமியின் கொடூரத் தாக்குதலின் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. நாகை, வேளாங்கண்ணி ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு வந்த யாத்ரீகர்களை வாரி சுருட்டிக் கொண்டு போனது இந்த சுனாமி.
சுனாமி தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயர நாளில் கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பூக்களைத் தூவியும் கடல் பேரலைகள் காவு கொண்ட உறவுகளுக்காக இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
What's Your Reaction?