குழந்தைகளுக்கு சத்தான இந்த ராகி மால்ட் ஒரு தடவை செஞ்சு கொடுங்க!
How to Prepare Ragi Malt Recipe

குழந்தைகளுக்கு சத்தான இந்த ராகி
மால்ட் ஒரு தடவை செஞ்சு கொடுங்க!
குழந்தைகளுக்கு ஏதாவது ஆரோக்கியமாக கொடுக்கணும் அப்படின்னு தேடிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அதை செய்யறதுக்கான நேரம் இல்லாததால பால் மட்டுமே காய்ச்சி கொடுத்துடுவாங்க. அதுவுமில்லாம இப்ப இருக்குற குழந்தைகள் டீ, காபின்னு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. டீ காபி மட்டும் இல்லாம கடைகளில் விற்கக்கூடிய நிறைய ஜூஸ் வகைகளையும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அது எல்லாமே உடம்புக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதுக்கு பதிலா நம்மளோட பாரம்பரியமான பானமான ராகிமால்ட் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களும் இது குடிக்கிறது மூலமா உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். -விளம்பரம்- இடுப்பு வலி கால் வலி இதெல்லாம் குணமாகும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். அவ்ளோ ஆரோக்கியமான இந்த ராகி மால்ட்டுக்கு நம்ம ஒரு பொடி தயார் செய்யணும். அது தயார் செஞ்சு ஒரு மாசம் வரைக்கும் நம்ம அதை ஒரு கண்ணாடி ஜார்ல போட்டு பத்திரமா வச்சுக்கலாம். எப்போ எல்லாம் தேவைப்படுமோ அப்போ அதிலிருந்து ரெண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அது கூட பால் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வச்சு குழந்தைகளுக்கு கொடுத்துட்டா ஒரு அருமையான ஆரோக்கியமான பானம் தயாராகிவிடும். காலையில ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு அவசர அவசரமா ஏதாவது டிபன் செஞ்சு ஊட்டி விடறதுக்கு பதிலா நீங்க கண்ணாடி ஜார்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்க ராகிமால்ட் பவுடர் ல இருந்து கொஞ்சமா எடுத்து அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு குடிக்கிறதுக்கு கொடுக்கலாம். வயிறும் நிறைந்திருக்கும் ஆரோக்கியமும் நிறைய கிடைக்கும். சுவையான இந்த ராகிமால்ட் பவுடரை உங்க வீட்ல செஞ்சு வச்சுக்கிட்டு தேவைப்படும் போதெல்லாம் போட்டு குடிக்கலாம். டீ காபிக்கு பதிலா இதை குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு சிலர் டீ காபி குடிக்க கூடாது அப்படின்னு ரொம்ப ரொம்ப கட்டுப்பாட்டோடு இருப்பாங்க அவங்களுக்கு எல்லாம் இந்த ராகி மால்ட் ஒரு சூப்பரான மாற்று வழிமுறையா இருக்கும். தினமும் கூட ஒரு டம்ளர் குடிக்கிறது மூலமா நம்ம உடம்புக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். சுவையான ஆரோக்கியமான இந்த ராகி மால்ட் பவுடர் நிறைய கடைகளிலேயே கிடைக்குது ஆனால் வீட்டில் செஞ்சு குடிச்சாதான் அதோட ஆரோக்கியம் நமக்கு முழுமையாக கிடைக்கும். இந்த ராகி மால்ட் பவுடர் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான். அரை மணி நேரத்திலேயே சட்டுனு இந்த பவுடரை செஞ்சிடலாம் அதுவே கொஞ்சம் அதிகம் தான் அதுக்கு முன்னாடியே கூட நம்ம இது செஞ்சிடலாம். ஆரோக்கியமான இந்த ராகிமால்ட் பவுடரையும் ராகி மால்ட்டும் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம். ராகி மால்ட்
எப்பவுமே குழந்தைகளுக்கு ஏதாவது ஆரோக்கியமாக கொடுக்கணும் அப்படின்னு தேடிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அதை செய்யறதுக்கான நேரம் இல்லாததால பால் மட்டுமே காய்ச்சி கொடுத்துடுவாங்க. அதுவுமில்லாம இப்ப இருக்குற குழந்தைகள் டீ, காபின்னு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. டீ காபி மட்டும் இல்லாம கடைகளில் விற்கக்கூடிய நிறைய ஜூஸ் வகைகளையும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அது எல்லாமே உடம்புக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதுக்கு பதிலா நம்மளோட பாரம்பரியமான பானமான ராகிமால்ட் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களும் இது குடிக்கிறது மூலமா உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இடுப்பு வலி கால் வலி இதெல்லாம் குணமாகும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
1 பவுள் 1 கடாய் 1 மிக்ஸி தேவையான பொருட்கள் 1 கப் ராகி மாவு 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை 1 சிட்டிகை குங்குமப் பூ 2 ஏலக்காய் 5 பாதாம், பிஸ்தா, முந்திரி 1 கப் பால் செய்முறை ஒரு கடாயில் ராகி மாவு சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பாதாம் முந்திரி பிஸ்தா அனைத்தையும் வருத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து நன்றாக அரைத்து சலித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்ததும் அடுப்பில் வைத்து பால் சேர்த்து நாட்டு சர்க்கரையும் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான ராகி மால்ட் தயார். -
What's Your Reaction?






