பொங்கல் அப்போ சாப்புடுற கரும்புல இவ்வளவு நன்மையா? இது தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க
Karumpu benefits in tamil
பொங்கல் அப்போ சாப்புடுற கரும்புல
இவ்வளவு நன்மையா? இது தெரிஞ்சா
கட்டாயம் சாப்பிடுவீங்க
Sugarcane benefits: பொங்கல் பண்டிகையில் நாம் விரும்பி உண்ணும் கரும்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
பொங்கல் பண்டிகை என்றாலே பலருக்கும் கரும்பு தான் நினைவுக்கு வரும். பொங்கல் சமைத்து உண்ட பிறகு கரும்பு சாப்பிட்டு கொண்டே கதை பேசுவதும் தனி சுகம் தான். வெறும் இனிப்பு பொருளாக மட்டும் இல்லாமல் கரும்பில் பல சத்துக்களும் உள்ளன. இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. அது குறித்து இங்கு காணலாம்.
என்னென்ன சத்துக்கள் உள்ளன?
புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் இதில் அதிகம் காணப்படுகின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையை விட கரும்பில் தான் அதிகமான வைட்டமின்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரும்புச் சத்து, மக்னீசியம் , வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்றவை கரும்பில் இருக்கின்றன.
நோயெதிர்ப்பு சக்தி!
நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்கள் கரும்பில் காணப்படுகின்றன. இவை மலேரியா, தோல் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சிக்கலான நிலைமைக்கு கொண்டு செல்லும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது.
சிறுநீரகத்தின் நன்மை!
நமது உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் உப்பு, தண்ணீர் ஆகியவற்றை முறையாக வெளியேற்றி சிறுநீரகங்களை பராமரிக்கிறது. இதற்கு கரும்பில் உள்ள டையூரிடிக் பண்புகள் உதவியாக உள்ளன. எலுமிச்சை சாறு அல்லது இளநீருடன் கரும்பு சாறு கலந்து குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகளை தவிர்க்க முடியும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் தொற்று, எரிச்சல் ஆகியவற்றை நீக்க கரும்பு சாறு உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.
கர்ப்பிணிகளுக்கு சிறந்தது!
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்ளும் போது எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கரும்பு உண்ணும் போது அது எடை குறைப்புக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு மிதமான எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கர்ப்பிணிகள் கரும்புச் சாற்றை இஞ்சியுடன் அருந்தலாம்.
இதய நோய் அலட்ர்ட்!
இதய நோய் உள்ளவர்களும், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் கரும்பை அதிகமாக சாப்பிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2014இல் செய்யப்பட்ட ஆய்வின்படி, சர்க்கரையிலிருந்து 20% கலோரிகளை எடுத்து கொள்பவர்கள், சர்க்கரையிலிருந்து 8% கலோரிகளை எடுப்பவர்களை விடவும் இதய நோயால் தாக்கப்படும் வாய்ப்பு 38% அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
எச்சரிக்கை!
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், உடல் பருமன் பிரச்சனை ஆகியவை கருப்பினால் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அளவாக கரும்பு உண்டால் பலன் கிடைக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதா அளவாக கரும்பு சாப்பிட்டு இந்த பொங்கலை கொண்டாடுங்கள்.
What's Your Reaction?