சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!
How to prepare Chocolate milk Recipe in tamil

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு
தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!
சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சாக்லேட் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சாக்லேட் மில்க் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வெளியில கடைகளில் போய் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத சூழ்நிலையில் வீட்ல சாக்லேட் இருந்தா போதும் சூப்பரா நம்ம சாக்லேட் மில்க் செஞ்சு குடிக்கலாம் சாக்லேட் லவ்வர்ஸ்க்கு.
இந்த சாக்லேட் மில்க் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நல்லா ஐஸ் கட்டிகள் எல்லாம் போட்டு ஜில்லுனு பிரிட்ஜுக்குள்ள வச்சு எடுத்து குடிக்கும் போது தொண்டைக்கு இதமா ரொம்பவே குடிக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். இந்த சாக்லேட் மில்க் சின்ன குழந்தைகளுக்கு மட்டும் இல்லாம பெரியவங்களுக்கு மே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சாக்லேட் மில்க் செய்ததற்கு நம்ம வீட்டில் இருக்கிற சில பொருட்கள் மட்டுமே போதுமானது. இதுல கண்டன்ஸ்டு மில்க் ஊத்தி செய்றதால டேஸ்ட் ரொம்ப ரிச்சா குடிக்கிறதுக்கும் சூப்பரா இருக்கும். இனிமேல் உங்களுக்கு சாக்லேட் சம்பந்தமா ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணுச்சுன்னா வெளியில கடைகளில் போய் வாங்கி எதுவும் குடிக்க வேண்டாம் வீட்டிலேயே சூப்பரா இந்த சாக்லேட் மில்க் செஞ்சு குடிங்க. டேஸ்ட்டும் அட்டகாசமாக இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது குளு குளு என்று குடித்துக்கொண்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த வகையில இந்த சூப்பரான சாக்லேட் மில்க் செஞ்சு குடிக்கும் போது இந்த வெயிலுக்கு சாப்பாடு கூட தேவைப்படாது இந்த சாக்லேட் மில்க் மட்டுமே போதுமானது.இப்ப வாங்க இந்த சூப்பரான சுவையான சாக்லேட் மில்க் எப்படி செய்வது என்று பார்க்கலாம் தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் சாக்லேட்
1 டீஸ்பூன் கொக்கோ பவுடர்
1 கப் கண்டன்ஸ்டு மில்க்
1 கப் பால்
1/2 டீஸ்பூன் காபி பவுடர்
ஐஸ்கட்டிகள் தேவையான அளவு
செய்முறை
ஒரு பெரிய டம்ளரில் சாக்லேட் கொக்கோ பவுடர் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
அதில் காய்ச்சி ஆற வைத்த பால்ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
ஒரு சிறிய பாத்திரத்தில் காபித்தூள் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதனையும் அதனுடன் சேர்த்து கலந்து தேவைப்பட்டால் ஃபிரிட்ஜுக்குள் வைத்து எடுத்து குடித்தால் சுவையான சாக்லேட் மில்க் தயார்.
What's Your Reaction?






