சாக்லேட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Chocolate Benefits in tamil
சாக்லேட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
சாக்லேட் சாப்பிடுவது நல்லதா, ஒரு நாளைக்கு எந்தெந்த வயதினர் எவ்வளவு சாக்லேட் சாப்பிடலாம் எனத் தெரிந்துகொள்வோமா? வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் இனிப்பு பண்டம், சாக்லேட். சாக்லேட் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செராட்டினான் உற்பத்தியை அதிகரிக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி சோர்வை நீக்க உதவுகிறது.
சாக்லேட் சாப்பிடுவது நல்லதா, ஒரு நாளைக்கு எந்தெந்த வயதினர் எவ்வளவு சாக்லேட் சாப்பிடலாம் எனத் தெரிந்துகொள்வோமா? வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாக்லேட் பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. இன்று பல வித சுவைகளில் கிடைக்கும் சாக்லேட்கள் தனித்துவம் பெற்றவை. இதன் விலையும் மலிவாக இருப்பதால் அனைவராலும் உண்ணப்படுகிறது. சில வகை சாக்லேட்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
எப்படி இருந்தாலும் சாக்லேட்கள் உண்ணும் போது உடலுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது. அதிலும் இந்த டார்க் சாக்கலேட்களுக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை இருக்கிறது.
வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும், வீக்கமும் தான் அல்சைமர் போன்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில், எபிகேடசின் என்ற பொருள் டார்க் சாக்லேட்டில் உள்ளதாகவும், அது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒரு கடி அளவு சாக்லெட் உங்களுக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாக்லேட் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் அதீத சர்க்கரை உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தக்கூடும். தரமான சாக்லேட்டில் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப்படும். ஆக, விலை அதிகமாக இருந்தாலும் தரமான சாக்லேட் சாப்பிடுவது நல்லது. இதில் சாக்லேட்டின் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். விலை மலிவான சாக்லேட்களில் சாக்லேட் அளவு குறைக்கப்பட்டு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
What's Your Reaction?