சிக்கன் vs மட்டன்.. எது உடலுக்கு நல்லது?

Chicken vs mutton which one is good?

Jan 16, 2025 - 21:34
 0  8
சிக்கன் vs மட்டன்.. எது உடலுக்கு நல்லது?

சிக்கன் vs மட்டன்.. எது உடலுக்கு நல்லது?

 

வீக் எண்ட் வந்தாலே அசைவம் சாப்பிடுவது தான் இங்கே பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், எல்லா அசைவமும் ஒன்று இல்லை. குறிப்பாக நாம் அதிகம் எடுத்துச் சாப்பிடும் அசைவ உணவுகளாக உள்ள சிக்கன் மற்றும் மட்டன் இரண்டில் எது உண்மையாகவே நமது உடலுக்கு நல்லது.. எதைச் சற்று தவிர்க்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். நம்ம ஊரில் வார இறுதி வந்தாலே அசைவம் கண்டிப்பாக வாங்கிவிடுவோம். இங்குப் பலருக்கும் அசைவம் சாப்பிடவில்லை என்றால் வீக் எண்ட் முடிந்தது போலவே இருக்காது.

சிக்கன் vs மட்டன்: இதனால் வாரவாரம் அசைவம் வாங்குவதைப் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், நமக்குக் கிடைக்கும் அனைத்து அசைவமும் ஒரு போன்ற சத்துகளைக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொன்றும் உள்ள சத்துகள் பெரியளவில் மாறுகிறது. நாம் இங்கு மக்கள் அதிகம் சாப்பிடும் அசைவ உணவுகளான சிக்கன் மற்றும் மட்டன் இரண்டிலும் என்ன சத்துகள் உள்ளது. அதில் எது உடலுக்கு நல்லது என்பதைப் பார்க்கலாம். நம் நாட்டில் மக்கள் அதிகம் சாப்பிடு உணவு என்றால் சிக்கன் தான். ஒரு கிலோ ரூ.250க்கு விற்கும் சூழலில், அதை வாங்கி ஒரு பிடி பிடித்தால் அப்படி இருக்கும். அதேநேரம் மட்டனுக்கும் இங்கு மிகப் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், மட்டன் விற்கும் விலைக்கு அதை வாங்கும் முன்பு ஒரு முறை பல முறை யோசிக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. இவ்வளவு வித்தியாசம் இருக்கா: விலை ஒரு பக்கம் இருக்கட்டும். சிக்கன், மட்டன் இரண்டும் வெவ்வேறு வகையான கறிகளைக் கொண்டது. பொதுவாகக் கொழுப்பு குறைவாக இருக்கும் கறியை ஆங்கிலத்தில் ஒயிட் மீட் (white meat) என்றும் கொழுப்பு அதிகம் உள்ள கறியை ரெட் மீட் (red meat) என்றும் குறிப்பிடுவார்கள். இதில் மட்டன் முழுக்க முழுக்க ரெட் மீட் வகையைச் சேர்ந்தது. அதேநேரம் சிக்கனை பொறுத்தவரை அதன் மார்பு உள்ளிட்ட பகுதிகள் ஒயிட் மீட் ஆகும். அதேநேரம் நாம் விரும்பி சாப்பிடும் சிக்கன் லெக் பீஸ் மற்றும் சிக்கன் தொடை ஆகியவை ரெட் மீட் வகையில் வரும். இதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

 

மக்களே நோட் பண்ணுங்க சிக்கன் மற்றும் மட்டன் என இரண்டிலுமே உங்களுக்குத் தேவையான புரதச் சத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிக்கனை காட்டிலும் மட்டனில் சற்று புரதச் சத்து கூடுதலாகவே இருக்கிறது. அதேபோல இரும்புச் சத்தும் கூட சிக்கனை விட மட்டனில் அதிகமாகவே இருக்கிறது. 100 கிராம் மட்டனில் 2.7 மில்லி கிராமாக இரும்புச் சத்து இருக்கிறது. அதேநேரம் இது சிக்கனில் 1.3 மில்லி கிராமாக இருக்கிறது. மட்டனிலும் சத்து இருக்கு: எல்லாம் சூப்பர் அப்போ மட்டன் தான் நல்லதா என நீங்கள் கேட்கலாம்.. பிரச்சினையே மட்டனில் இருக்கும் கொழுப்பு தான். சிக்கனில் 100 கிராமுக்கு 14 கிராம் மட்டுமே கொழுப்பு இருக்கிறது. அதேநேரம் மட்டனில் 100 கிராமுக்கு 20 கிராம் வரை கொழுப்பு உள்ளது. அதுவே பிரச்சினைக்கு முதல் காரணம். மற்றொரு விஷயம் மட்டன் உட்பட ரெட் மீட்டை தொடர்ச்சியாகச் சாப்பிட்டால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. இதுதான் இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்து விவரம்.: மொத்தத்தில் நாம் இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் சிக்கன் என்றால் அது நல்லது என்று சொல்ல முடியாது. அதன் மார்பு பகுதி உட்பட ஒயிட் மீட் பகுதிகளில் மட்டும் கொழுப்பு குறைவு. எனவே அதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இதற்காக மட்டனை எடுத்துக் கொள்ளவே கூடாது என்றும் இல்லை. சிக்கனை வாரம் ஒரு முறை எடுத்துக்கொண்டால்.. மட்டனை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம் அதில் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடாது என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள், டேஸ்ட் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தான் என்றாலும் ஒப்பீட்டளவில் மட்டனில் டேஸ்ட் அதிகம். அதற்குக் காரணம் ரொம்ப எளிது. அதில் இருக்கும் கொழுப்பு தான். கொழுப்பு அதிகமாக இருப்பதால் அதில் ருசி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow