மாலை வேளையில் டீ காபியுடன் சாப்பிட சிக்கன் பஜ்ஜி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
How to prepare Chicken Bajji in tamil

மாலை வேளையில் டீ காபியுடன் சாப்பிட சிக்கன் பஜ்ஜி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி அப்படின்னு நிறைய பஜ்ஜி செஞ்சுருப்பீங்க. ஆனா சிக்கன் வச்சு பஜ்ஜி செஞ்சு ஆனா இருக்கீங்களா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். சிக்கன் பஜ்ஜி ரொம்பவே ஒரு வித்தியாசமான ரெசிபியா இருக்கும். இந்த பஜ்ஜி செய்யறதுக்கு முன்னாடி சிக்கனை சிக்கன் மசாலா மஞ்சள் தூள் எலுமிச்சைச்சாறு இஞ்சி பூண்டு விழுது உப்பு போட்டு நல்ல ஊறவெச்சு தோசை கல்லுல போட்டு வேகவைத்து எடுக்கணும்.
ஆவில கூட வேக வைக்கலாம் ஆனா இது தான் சூப்பரா இருக்கும் ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சுவையான சிக்கன் பஜ்ஜி கண்டிப்பா நீங்க ட்ரை பண்ணி பார்த்திருக்கவே மாட்டீங்க ஒரே ஒரு நாள் மட்டும் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த சிக்கன் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சிக்கன் வச்சி நம்ம சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி சிக்கன் 65 அப்படின்னு நிறைய செஞ்சுருப்போம் ஆனா இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியாவே இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் நிறைய பஜ்ஜி சாப்பிடுவாங்க இந்த பஜ்ஜிக்கு சைடு டிஷ் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம் செம டேஸ்டா இருக்கும் ஒரே ஒரு தடவை இந்த பஜ்ஜி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த சிக்கன் பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1/4 கி எலும்பில்லாத சிக்கன்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் சிக்கன் மசாலா
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
1 கப் கடலை மாவு
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
சிக்கனை கழுவி ஒரு குச்சி வைத்து குத்தி மஞ்சள் தூள் சிக்கன் மசாலா இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த்தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் பஜ்ஜி தயார்.
What's Your Reaction?






