Bank Job: 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; மாதம் ரூ. 85,920 சம்பளம்... முழுவிவரம் இதோ !
Central Bank of India Recruitment 2025 Notification: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 1000 காலி பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Central Bank of India Recruitment 2025: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் உள்ள உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபீஸருக்கான 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து இருந்தால் போதும் 85,920 ரூபாய் வரைக்கும் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இதில் எஸ்சி பிரிவில் - 150, எஸ்டி பிரிவில் - 75, ஒபிசி பிரிவில் - 270, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் - 100, பொதுப் பிரிவில் - 405 என மொத்தம் 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 40 காலிப்பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவராக வேண்டும். இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். அதிகப்படியாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 30.11.1994 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது. அதே போன்று, அதிகபடியாக 30.11.2004 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது. சென்ட்ரல் வங்கியில் கிரெடிட் அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் குறைந்தபட்சம் ரூ.48,480 முதல் அதிகபடியாக ரூ.85,920 வரை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரடிட் ஆபிசர் பிரிவில் 1000 இடங்கள்
கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 20 - 30 (30.11.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150
கடைசிநாள்: 20.2.2025
விவரங்களுக்கு: https://centralbankofindia.co.in/
What's Your Reaction?






