சுவையான அவியல் செய்வது எப்படி..! How To Make Avial In Kerala Style..!
How to make Avial Recipe in Tamil
சுவையான அவியல் செய்வது எப்படி..! How To Make Avial In Kerala Style..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய சூப்பரான ஒரு டிஷ் பார்க்க போகிறோம். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் (Avial Recipe In Tamil) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இதோ உங்களுக்காகவே ஈஸியான முறையில் அவியல் செய்முறை விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்போ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!
அவியல் செய்ய – தேவையான பொருட்கள்:
- கேரட் – 1/4 கப் (நீட்ட வடிவில் நறுக்கியது)
- பீன்ஸ் – 10 நறுக்கியது (நீட்ட வடிவில் நறுக்கியது)
- முருங்கைக்காய் – 1 (நீட்ட வடிவில் நறுக்கியது)
- அவரைக்காய் – 10 நறுக்கியது
- கத்தரிக்காய் – 3 நறுக்கியது
- சேனை கிழங்கு – 1/4 கப்
- உருளை கிழங்கு – 1 (தோல் சீவி நறுக்கியது)
- தேங்காய் துருவல் – 1/4 கப்
- தயிர் – 1/4 கப்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4 அல்லது 5
- உளுந்து – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கருவேப்பில்லை – சிறிதளவு
- தண்ணீர் – 1 டம்ளர்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
அவியல் செய்முறை விளக்கம் 1:
முதலில் குக்கரில் நறுக்கிய கேரட்டை சேர்க்கவும். அதன் பிறகு நறுக்கி வைத்த பீன்ஸை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு நறுக்கிய அனைத்தையும் முருங்கைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சேனை கிழங்கு, உருளை கிழங்கு, எல்லாவற்றையும் சேர்த்து விட்டு 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
அவியல் ரெசிபி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:
தண்ணீர் சேர்த்த பிறகு உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். மஞ்சள் தூளை சேர்த்த பின் நன்றாக கலந்து விட வேண்டும். கலந்த பிறகு குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்முறை விளக்கம் 3:
இப்போது மசாலா செய்ய மிக்ஸியில் தேங்காய் துருவலை எடுத்து கொள்ளவும். அதனுடன் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். குக்கரில் காய்கறி வெந்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை இதில் ஊற்றிக்கொள்ளவும்.
சுவையான அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:
அரைத்த தேங்காய் துருவல் சேர்த்த பிறகு தயிரை சேர்க்கவும். இப்போது தயிர் சேர்த்த பிறகு பொறுமையாக கிளறிவிட வேண்டும். அடுத்து 1/2 டீஸ்பூன் உப்புவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக 5 நிமிடம் இதனை கொதிக்க விட வேண்டும்.
ஈஸியான முறையில் அவியல் செய்முறை விளக்கம் 5:
நன்றாக கொதித்த பின் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது தாளிக்கும் கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். கடுகு நன்றாக பொரிந்த பிறகு 1 டீஸ்பூன் உளுந்து சேர்த்து கொள்ளவும்.
கேரளா அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:
உளுந்து நன்றாக பழுப்பு நிறத்தில் வரவேண்டும். அடுத்ததாக சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும். இப்போது தாளித்ததை குக்கரில் இருக்கும் அவியலில் சேர்க்கவும். சேர்த்த பிறகு கிளற வேண்டும். அவ்ளோதாங்க இந்த சுவையான கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் உங்க வீட்டில மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.
What's Your Reaction?