குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகளுக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்...டிஜிட்டல் விதிகள் வரைவு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு - PARENTAL CONSENT MANDATORY
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023ன் கீழ் வரைவு விதிகளை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 18ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. சமூக ஊடக தளங்களில் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்குவதற்கு பெற்றோரின் ஒப்புதல் மற்றும் அடையாளம் கட்டாயமாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுய தரவுகளுக்கான சாத்தியமான தரவு உள்ளூர்மயமாக்கல் பரஸ்பரம் தேவைகளை வலியுறுத்துகிறது.
கூடுதல் மேற்பார்வை: குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை செயலாக்கம் செய்வதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் தேவை என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படியான அல்லது அரசால் வழங்கப்பட்ட அடையாள சான்றின் படியான பெற்றோரின் அடையாளம் மற்றும் வயது ஆகியவற்றை தாமாக முன்வந்து உள்ளீடு செய்து அதனை சரிபார்பதையும் இந்த வரைவு விதிகள் கட்டாயம் ஆக்குகின்றன.
தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் கூற்றப்படி வரைவு விதிகளில் முக்கியமான ஒரு ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவெனில், குறிப்பிட்ட விஷயங்களில் உள்ளூர் மயமாக்கல் என்ற அம்சத்தில் எல்லை தாண்டிய தரவு பகிர்வு மீதான கூடுதல் மேற்பார்வையை இது கோருகிறது.
சரிபார்த்தல்: குழந்தையின் தனிப்பட்ட தரவுகளை செயலாக்கம் செய்யும் முன்பு, சரிபார்க்கப்பட்ட பெற்றோரின் ஒப்புதலை உறுதி செய்வதற்கான அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை மற்றும் தேவையான தரவு நம்பிக்கைகளை தேவையான தொழில்நுட்பங்களை தகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் என்ற முறையில் தனிப்பட்ட அடையாளத்தை சரிபார்ப்பதற்காக, இந்தியாவில் சட்டப்படியான அவ்வப்போதைய தருணங்களில் அமலில் இருக்கும் விதிகளுக்கு இணங்க அந்த அடையாள சான்று இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
தாமாக முன் வந்து அளிக்கும் அடையாளள சான்று மற்றும் வயது அல்லது அதே போல இணைய வழி டோக்கனை இணைப்பது சட்டப்படியான அல்லது அரசால் வழங்கப்பட்டதாகவோ அல்லது அடையாளம் மற்றும் வயது ஆகிய சான்றுகள் ஏற்கனவே இருக்கும் தளத்தில் இருந்தோ சரிபார்க்கப்பட வேண்டும்.
எவ்வாறு இது செயல்படுகிறது என்ற உதாரணத்தை சுட்டிக்காட்ட, ஒரு ஆன்லைன் தளத்தில் ஒரு குழந்தையின் கணக்கு தொடங்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. கூறப்பட்ட அமைப்பானது, பெற்றோர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை அடையாளம் காண வயது, அடையாளம் உள்ளிட்டவை சரிபார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் லாக்கர் சேவை வழங்குநரின் சேவைகளில் இது போன்ற விவரங்கள் பெற்றோரால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தேவை: விதியின்படி அமைப்பானது, மக்களின் ஒப்புதலுடன் கூடிய ஆவணங்களை நிர்வகிக்கும் அமைப்பின் ஒப்புதல் அளிக்கும் மேலாளருக்கு தனிநபர்கள் தங்களது ஒப்புதலை வழங்கினால் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை அமைப்பானது உபயோகிக்கவோ செயலாக்கவோ முடியும். தவிர தரவு உள்ளூர் மயமாக்கல் தொடர்பான விதிகள், தகவல் தொழில்நுட்பநிறுவனங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சட்டமானது, தடைசெய்யப்பட்ட வரம்புகளைத்தவிர எல்லை தாண்டிய தரவு பகிர்வை பெரும்பாலும் அனுமதிக்கிறது. எனவே கூடுதல் கண்காணிப்புக்கு சாத்தியம் இருப்பதாக வரைவு விதிகளில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட தனிநபர் தரவுகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறப்பு வாயந்ததாக தரவு அமைப்புகள் திகழ வேண்டும். இந்திய பிராந்தியத்துக்கு வெளியே தனிநபர் தரவுகள், தரவு புழக்க நடவடிக்கைகள் என்பதானது மாற்றம் செய்யப்படக் கூடாது என்ற கட்டுபாடுகளைக் கொண்டதாக இந்த செயலாக்கம் இருக்க வேண்டும் என வரைவு விதிகள் கூறுகின்றன.
தரவு நம்பிக்கை அமைப்புகள் எந்த தனிப்பட்ட தரவு சேகரி்ககப்பட வேண்டும், என்ன நோக்கம் என்பவை எல்லாம் செயலாக்கம் செய்ய வேண்டும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின்படி குறிப்பிட்ட தரவு நம்பிக்கை அமைப்புகள் தனிநபர் தரவின் தரம் மற்றும் எண்ணிக்கை தனிநபரின் உரிமைகளுக்கான அபாய காரணிகள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதா? அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு அடிப்படையில் செயலாக்கம் செய்யப்பட வேண்டியதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
தணிக்கை தேவை: ஒரு குறிப்பிடத்தக்க தரவு நம்பகத்தன்மை என்பது அறிவிக்கை செய்யப்பட்ட தேதியில் இருந்து 12 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தரவு நம்பக தன்மையில் பிரிவு சேர்க்கப்பட்டதில் இருந்து தரவு பாதுகாப்பு தாக்கம் குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தின் வழிமுறைகள் விதிகள் திறம்பட பின்பற்றப்படுகிறதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும் என வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க தரவு நம்பிக்கை என்பது, பதிவேற்றம் செய்தல், வெளி்பபடுத்துதல், பிரசுரித்தல், சேமித்தல், புதுப்பித்தல் அல்லது தனிநபர் தரவுகளை பகிர்தல் என்பது தனிப்பட்ட நபரின் உரிமைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருக்கக்கூடாது.
இந்தியாவுக்கு வெளியே தனிநபர் தரவுகளை செயலாக்கும்போது, எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது இந்தியாவுக்கு வெளியே உள்ள பிராந்தியத்துக்கு தரவு நம்பிக்கை அமைப்பு மாற்றும்போது, அந்த தரவு நம்பிக்கை அமைப்பானது மத்திய அரசாலோ , பொதுவாக அல்லது குறிப்பிட்ட உததரவின் அடிப்படையிலோ, எந்த ஒரு வெளிநாட்டிலும் கிடைக்கூடிய வகையிலான இது போன்ற தனிநபர் தரவுகள் அல்லது எந்த ஒரு நபர் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்பு அல்லது ஒரு மாநிலத்தில் உள்ள எந்த ஒரு முகமையோ சில தேவைகளை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியதற்கு உட்பட்டதாக இருக்கும் என விதிகளில் முன்மொழியப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:இது குறித்து பேசிய இந்துஸ்லா அமைப்பின் பங்குதாரர் ஷிரேயா சுரி, "எல்லை தாண்டிய தரவு பகிர்வு தொடர்பான குறிப்பிட்ட தரவு நம்பிக்கை அமைப்புகள் பின்பற்ற வேண்டிய கடமைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்த சட்டமானது இது போன்ற மாற்றங்களை, தடை செய்யப்பட்ட வரம்புகளுக்கு மத்தியில் சாத்தியமான கூடுதல் கண்காணிப்பை கோருவதை இந்த வரைவு விதிகள் குறிப்பால் உணர்த்துகின்றன. இந்தியாவுக்கு வெளியே சில தனிநபர் தரவுகள் மாற்றப்படுவதில் இருந்து கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று முன்மொழிவு குழு பரிந்துரைக்கலாம். இது ஒழுங்குமுறை பரப்பில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட பங்கெடுப்பாளர் கருத்தில் கொள்வதற்கான முக்கியமான அம்சமாக இருக்கும்,"என்றார்.
தரவு மீறல்கள் நேரிட்டால்,அமைப்பானது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீறல் குறித்த தன்மை, அதன் பரப்பு, நேரம் , மீறல் நிகழ்ந்த இடம், இந்த மீறல் காரணமாக எழக்கூடிய காரணிகள் போன்ற மீறல் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். அபாயத்தை குறைக்கும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
What's Your Reaction?