மகிழ்ச்சி - Magizhchi
Magizhchi kavithai

மகிழ்ச்சி
இருட்டை அனுபவித்தவர்க்கு
வெளிச்சம் தான் மகிழ்ச்சி
இளமையில் வறுமை கண்டவர்க்கு
தான் சம்பாதித்த செல்வம் மகிழ்ச்சி
தாய்க்கு அவள் பெற்று எடுத்த
குழந்தையின் இன்பம் மகிழ்ச்சி
படிப்பில்லா குழந்தைக்கு நாம் புகட்டும்
இலவச கல்வி தான் மகிழ்ச்சி
குளிரில் ஆடையின்றி தவிப்பவர்க்கு
பேகன் போல் போர்வை தந்தால் மகிழ்ச்சி
வளர் இளம் பெண்ணிற்கு தன் துயர்களை
மாற்றும் உற்சாகமே மகிழ்ச்சி
தந்தை அன்பினை இழந்தவர்க்கு
தெய்வம் தான் மகிழ்ச்சி
தாய் அன்பு இல்லை என்றால்
நல் மனைவி தான் மகிழ்ச்சி
எல்லா நேரத்திலும் எதிலும்
ஊக்கம் தான் மகிழ்ச்சி
உண்மை அன்பை உணர
துணையான குருவே மகிழ்ச்சி
உன்னில் என்னில் வேறுபாடு உணரும் வரை
இல்லை; எல்லாம் ஒன்றென்ற உண்மை மகிழ்ச்சி !
மகிழ்ச்சி..!
தன்னுள்ளே ஒளித்த
தனித்துவ மகிழ்ச்சியை
பூமியில் மரம் செய்யும்
பூப்பிரகடனம்..!
அந்தரங்கத்தில் கொண்ட
ஆனந்தமகிழ்ச்சியைக்
சிசுவாகப் பிரசவிக்கும்
சின்னத் தாய்மை..!
அளவுகோலற்ற நட்பின்
அளவற்ற மகிழ்ச்சியை
பரிசுகளில் காட்டும்
பாங்கியின் அன்பு..!
துணையின் புரிதலின்
தூயமகிழ்ச்சியை
அணைப்பினில் சொல்லும்
ஆனந்த இணையர்..!
இருப்பின் மீதான
இயற்கையின் மகிழ்ச்சியை
மழையாகச் சுமக்கும்
மஞ்சுக்குவியல்..!
தன்னுள் நிறைந்த
தாய்மை மகிழ்ச்சியை
எங்கணும் இயற்கையாய்
எறிந்த ஏகன்..!
What's Your Reaction?






