குழந்தைகளுக்கு தைராய்டு - Thyroid Problem kids in tamil
குழந்தைகளுக்கு தைராய்டு - Thyroid Problem kids in tamil

குழந்தைகளுக்கு தைராய்டு
ஏற்படுவதற்கான காரணங்களும்,
அறிகுறிகளும்
Signs Of Thyroid Problems In Children: கழுத்துப் பகுதியின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியே தைராய்டு எனப்படுகிறது. இது பெரியவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ஆனால், இந்த தைராய்டு சுரப்பில் ஏற்படும் சிக்கல்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைகிறது. சில நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை. இந்த தைராய்டு பிரச்சனைகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம். இது பெரியவர்கள், குழந்தைகள் என இருவரையும் ஒரே அளவில் பாதிக்கக் கூடியதாக அமைகின்றன.
குழந்தைகளில் ஹைப்பர் தைராய்டிசம்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் பற்றி, பெங்களூர் கோரமங்களா, அப்பல்லோ க்ரேடில் & குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் ஷைலேஷ் டி மாண்டூர், எம்பிபிஎஸ், எம்டி (குழந்தை மருத்துவம்), நியோனாட்டாலஜியில் பெல்லோஷிப் நியோனட்டாலஜி HOD, அவர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இது பற்றி விரிவாகக் காண்போம்.
ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிவேக நிலைக்குச் செல்லும் போது அதிக தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இதன் அதிவேகத் தன்மையானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளில் ஹைப்பர் தைராய்டிசத்திற்கான காரணங்கள்
ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான காரணம் குடும்ப வரலாறே ஆகும். அதாவது பெற்றோர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பின், அது குழந்தைகளுக்கும் மரபுரிமையாக வரலாம்.
உணவில் அயோடின் குறைபாடு இருந்தால் இந்த வகை தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. அசாதாரண பிட்யூட்டரி சுரப்பி காரணமாகவும், ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்படுவர். மேலும், தைராய்டு சுரப்பியின் அழற்சியான ஆட்டோ இம்யூன் தைராய்டிஸ் காரணமாகவும் ஏற்படுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஹைப்பர் தைராய்டிசத்திற்கான அறிகுறிகள்
மருத்துவரின் கூற்றுப்படி, ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பின்வரும் அறிகுறிகளைப் பெற்றிருப்பர். அந்த வகையில் அவர்களின்
· தோல் மற்றும் கண் மஞ்சள் நிறமாக மாறுதல்
மலச்சிக்கல் ஏற்படுதல்
· பெரிய நாக்கு (நாக்கு பெரிதாகுதல் அல்லது நாக்கு வீக்கமடைதல்)
· மோசமான உணவு முறைகள்
· செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல்
இளம் குழந்தைகளில் ஹைப்பர் தைராய்டிசத்திற்கான அறிகுறிகள்
சிறு வயதில் தைராய்டு பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது கீழ்க்காணும் அறிகுறிகளைச் சந்திப்பர்.
· அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்
· முடி உதிர்தல்
· குறைந்த மன வளர்ச்சி
· வறண்ட சருமம்
· அதிக வளர்ச்சி
· பருவமடைவதில் தாமதம்
இவை குழந்தைகளில் ஹைப்பர் தைராய்டிசம் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்போ தைராய்டிசம் குறித்து பெங்களூர் மார்தஹள்ளி, அப்பல்லோ க்ரேடில் & குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிராச்சி போஸ்லே MBBS, MD பேசியுள்ளார். இவரது கருத்துப்படி, ஹைப்போ தைராய்டிசம் வயதுக்கு தகுந்தாற்போல வேறுபடுகின்றன. இந்த வகை தைராய்டிசத்திலிருந்து நிவாரணம் பெற லெவோதைராக்ஸின் என்ற தைராய்டு ஹார்மோன் மருந்தை சரியான டோஸில் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். மருத்துவர் கூறிய கூற்றுப்படி, ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உருவாக்காத நிலையில் ஏற்படுவதாகும். இது ஆட்டோ இம்யூன் சுரப்பி, பிறவி தைராய்டிடிஸ் அல்லது பிட்யூட்டர் கோளாறு உள்ளிட்டவற்றால் ஏற்படலாம் எனக் கூறினார். ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் வயதுக்கு ஏற்றாற்போல வேறுபடுகின்றன. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மோசமான உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் பிரச்சனை, நாக்கு விரிதல், வறண்ட தோல், நீடித்த மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே ஏற்படும் ஹைப்போ தைராய்டிசம் மோசமான வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால், குட்டையான வளர்ச்சி, பற்கள் தாமதமாக வளர்ச்சியடைதல், தாமதமாக பருவமடைதல் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைகளில் ஏற்படும் ஹைப்போ தைராய்டிசத்திற்கு சிகிச்சையாக தைராய்டு ஹார்மோன் மருந்தை சரியான டோஸில் எடுத்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளை மேலே கூறப்பட்ட அறிகுறிகளை வைத்து அடையாளம் காண முடியும். இவற்றின் மூலம் தைராய்டு நோயை சரியான நேரத்தில், பயனுள்ள முறையில் சிகிச்சை அளிக்க முடியும். இந்த அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசம்
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசத்திற்கான காரணங்கள்
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசத்திற்கான அறிகுறிகள்
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிகிச்சைகள்
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
What's Your Reaction?






