புத்தாண்டு Resolution குழந்தைகளே இதோ யோசனைகள்……….
New year Resoultion for Childrens
புத்தாண்டு Resolution குழந்தைகளே
இதோ யோசனைகள்……….
New Year Resolution : புத்தாண்டில் ஏன் தீர்மானம் எடுக்கவேண்டும். இதோ குழந்தைகளே உங்களுக்கான யோசனை.
குழந்தைகளுக்கான புத்தாண்டு தீர்மானங்கள்
குழந்தைகளுக்கு புத்தாண்டில் பரிசு மட்டும் கொடுத்து மகிழ்விக்காதீர்கள் பெற்றோர்களே, அவர்களிடம் தீர்மானங்கள் எடுக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள். அது அவர்களின் வாழ்வில் லட்சியங்களை வகுக்ககும், நேர்மறையான பழக்கவழக்கங்களை பழகவும் உதவும்.
அவர்களின் தீர்மானங்கள் அவர்களுக்கு தகுந்தபடி உண்மையானதாக இருக்க வேண்டும். சாதிக்க முடிந்த அளவில் இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தை ஒட்டி அந்த தீர்மானங்கள் இருக்க வேண்டும். அதற்கு வயதுக்கு தகுந்தார்போல் அவர்கள் என்ன தீர்மானங்கள் எடுக்கலாம் என்ற யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நல்ல சுகாதார பழக்கத்தை பழகுவது
ஆரோக்கியம் மற்றும் பலம் நல்ல சுகாதாரத்தின் மூலம் தான் துவங்குகிறது. நாளில் தினம் இருமுறை பல் துலக்கவேண்டும். கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை நன்றாக கழுவவேண்டும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படும்போது உங்கள் வாயை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்களை எடுக்கலாம்.
கல்வி சார்ந்த இலக்குகள்
கல்வி சார்ந்த இலக்குகளை அவர்கள் நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆனால், பெற்றோர் இதுகுறித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. கல்வியில் முன்னேறுவது, அதிக மதிப்பெண்கள் எடுப்பது ஆகியவை, கல்வி சார்ந்த இலக்குகளாக இருக்கலாம்.
புதிய ஹாபிகளை முயற்சிக்கலாம்
குழந்தைகள் புதிய ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்கு பிடித்த புதிய ஹாபியை வளர்க்க வேண்டும். ஒரு புதிய கருவியை வாசிக்க கற்றுக்கொள்ளலாம். ஒரு குழுவில் சேர்ந்து இயங்கலாம். ஏதேனும் கலையை கற்கலாம். விளையாட்டில் இணையலாம்.
திரைநேர கட்டுப்பாடு
உங்கள் குழந்தைகளுக்கு திரை நேரத்தை குறையுங்கள். வெளியே சென்று விளையாடுவது மற்றும் திரை நேரம் ஆகிய இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். அதற்கான கட்டுப்பாடுகளை தீர்மானமாக எடுக்கலாம்.
நன்றியுணர்வை பழக்கவேண்டும்
நன்றி என்ற உணர்வுதான், நம்மை அன்பானவர்களாக்குகிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நன்றியுணர்வை கற்றுக்கொடுங்கள். எனவே அவர்கள் எதற்கெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை தினமும் எழுத வையுங்கள். அப்போதுதான் அவர்கள் எதற்கெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது புரியும்.
அடிப்படை வீட்டு வேலைகளை கற்க வேண்டும்
அடிப்படை வீட்டு வேலைகள் மற்றும் வீட்டு மேலாண்டை ஆகியவற்றை குழந்தைப்பருவம் முதலே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் பொருளை அவர்கள் பாதுகாப்பாக அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் துவங்கி, அவர்களின் படுக்கை சுத்தம் செய்தல், செல்லப்பிராணிகளுக்கு உணவு கொடுப்பது என அவர்களின் வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நல்ல பழக்கவழக்கங்களை பழகவேண்டும்
குழந்தைகளுக்கு தயவுசெய்து மற்றும் நன்றி ஆகிய இரண்டு வார்த்தைகளை கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரிடமும் அவர்கள் பொறுமையாக நடந்துகொள்வதை ஊக்கப்படுத்துங்கள். இந்தப்பழக்கங்களையெல்லாம் அவர்கள் புத்தாண்டு தீர்மானமாகக்கொள்ளலாம்.
புதிய திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு நாளும் கட்டாயம் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கலாம். ஏதேனும் விளையாட்டு அல்லது இசைக்கருவி வாசிப்பதை புதிதாக தொடங்கலாம்.
பகிரும் பழக்கம்
குழந்தைகள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், உடன் பிறந்தவர்கள் என அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேணடும். அவர்கள் தங்கள் விளையாட்டு சாமான்களை பகிர்ந்துகொள்ள வேண்டும், அதேபோல்தான் அவர்கள் நண்பர்களுடனும் பழகவேண்டும் என்பதையெல்லாம் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள்
சில குழந்தைகள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களால் தங்களின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்த இயலாமல் போகலாம். எனவே பெற்றோர் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், அவர்களின் உணர்வுகளை வார்த்தைகள், எழுத்து, ஓவியம் என ஏதேனும் ஒன்றின் மூலம் வெளிப்படுத்த உதவவேண்டும். எனவே இதுபோன்ற தீர்மானங்களை எடுத்து, அவற்றை கடைபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர் உதவவேண்டும்.
What's Your Reaction?