குடும்பம் - FAMILY
Family
குடும்பம் - FAMILY
குடும்பம் என்று சொன்னாலே எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். ஏனென்றால் குடும்பம் என்பது மகிழ்ச்சியை உருவாக்கும் இடமாகவே இன்று வரை உள்ளது. இந்த உலகத்தில் உள்ள எல்லாவித நல்ல உயர்ந்த பண்புகளையும் சிந்தனைகளையும் கொடுக்கும் இடமாக குடும்பமே இன்று வரை உள்ளது
மன அழுத்தம் ஏற்படுகிறதா? வேலை பளுவாள் உங்களுக்கு டென்ஷன் பிபி போன்றவை வருகிறதா ஒரு வாரம் விடுமுறை எடுத்து குடும்பத்தோடு சுற்றுலா செல்லுங்கள் அல்லது குடும்பத்தோடு உங்களுடைய நேரத்தை செலவிடுங்கள் என்று எல்லோரும் கூறுகின்றனர். அதற்கு காரணம் குடும்பத்தில் தான் மிகவும் அமைதியான சூழ்நிலையும் அந்த அமைதியை கலகலப்பாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றக்கூடிய பக்குவமும் இருக்கிறது.
குடும்பம் பற்றிய கவிதைகளை இந்த பதிவில் படித்து மகிழ்ந்து உங்கள் குடும்பத்தார்க்கும் உங்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குடும்பம் தான் எல்லாமாக இறுதியில் இருக்கும், இறுதி வரை இருக்கும்.
குடும்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆணிவேரை போன்றது உயிர்கள் வளர்வதற்கும் வாழ்வதற்கும் இதுவே ஆதாரம்
குடும்பம் எனும் அமைப்பு மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே பைத்தியக்காரர்களின் கூடாரம் ஆகிவிடும்.
குடும்பம் என்பது ஏதோ ஒன்று அல்ல அதுதான் எல்லாம்
வெற்றியை கொண்டாடவும் தோல்வியை தாங்கிக் கொள்ளவும் குடும்பம் என்பது நிச்சயம் வேண்டும்
சின்ன சின்ன சந்தோஷங்களால் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் சிறிய உலகம் குடும்பம்
குடும்பங்களால் உருவானதுதான் இந்த உலகம்
ஒற்றுமை எனும் உணர்வு வளரும் இடம் குடும்பம்
பகிர்ந்து கொள்ளும் பண்பை பாசத்துடன் சொல்லித் தரும் இடம் குடும்பம்
எல்லோரும் தங்களுடைய மகிழ்ச்சியையும் வெற்றியையும் குடும்பத்துடன் தான் கொண்டாட விரும்புகிறார்கள் அதுதான் குடும்பம்.
இந்த உலகமே சிறு சிறு குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆம் நாய் பூனைக்கு கூட சிங்கம் புலிக்கு கூட குடும்பமானது இருக்கிறது. அதுதான் இந்த பிரபஞ்சத்தின் சிறப்பு. எல்லா உயிர்களுக்கும் குடும்பம் என்பது நிச்சயம் வேண்டும் அது தரும் வளமும் அது தரும் தெம்பும் வேறு எந்த தரப்பிலிருந்தும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.
ஒரு ஆண் மற்றும் பெண்ணின் முதல் கடமை தங்களுடைய குடும்பத்தை பாதுகாப்பதும் தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை போற்றுவதும் அவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் அவர்களை வளர்ப்பதுமாக இருக்கிறது. ஏன் ஒரு குடும்பத்திற்காக தாய் மற்றும் தந்தையரின் வாழ்நாள் முழுவதும் கழிகிறது என்ற கேள்வி எழலாம்? குடும்பத்தின் சிறப்பம்சங்கள் இதுதான் முதன்மையானது. குடும்பத்தின் அடுத்த கட்ட எதிர்கால தூண்களுக்காக தற்போது தலைமை பண்பில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்..
.
மகிழ்ச்சியோ வெற்றியோ குடும்பம் அல்லாமல் கிடைத்தால் அதில் எந்த ஒரு மனநிறைவும் கிடைக்கப்போவதில்லை குடும்பமே முதன்மை
சொந்தமுள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கும் மேலே…சொத்தும் சுகமும் வீண் தான் ஐயா
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஆனால் குடும்பத்துடன் இல்லை என்றால் அந்த மகிழ்ச்சியே ஒரு கேள்வி குறிதான்
அம்மாவிடம் அன்பும் அப்பாவிடம் பண்பும் தாத்தாவிடம் பொறுப்பும் பாட்டியிடம் வளர்ப்பும் கற்றுக் கொண்டு வளர்வதுதான் குடும்பம்
எல்லோரும் உழைப்பது என் குடும்ப முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான்…. யாரும் இங்கே தனக்காக வாழவில்லை
உறவுகளோடு உள்ளம் மகிழ்ந்து ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை
இறந்தால் தான் சொர்க்கம் என்பார்கள் ஆனால் கடவுள் எல்லோரும் சொர்க்கத்தை வாழும்போதே அனுபவிக்க வேண்டும் என்று கொடுத்தது தான் இந்த குடும்பம் எனும் அமைப்பு
தனக்காக வாழாமல் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள் என்றால் குடும்பம் எவ்வளவு சிறந்தது என்பதை உணரலாம்
குடும்பம் என்று வரும்பொழுது எல்லா உறவுகளும் பின்னே செல்லும்
என் அம்மாவிற்காக நான் இதை செய்ய வேண்டும். என் அப்பாவிற்காக நான் இதை செய்ய வேண்டும். என் குடும்பம் என் சம்பளத்தை நம்பி தான் இருக்கிறது. என் குடும்பத்தையே நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு பொறுப்பும் பிறக்கும் இடம் குடும்பமாக இருக்கிறது. எனவே தான் குடும்பத்தினால் ஒரு ஆண் மிகவும் பொறுப்பானவன் ஆகவும் ஒரு பெண் மிகவும் புத்திசாலியானவளாகவும் மாறுகிறாள் இந்த சமூகத்தில்…
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வேலை இருந்தாலும் அவரவர் குடும்பத்தை பார்க்கும் வேலையை மட்டும் கைவிடுவதே இல்லை எந்த நிலையிலும், அதுதான் குடும்பத்தின் சிறப்பு குடும்பம் தான் எல்லாமாக இறுதியில் இருக்கும் இறுதிவரை இருக்கும் என்பதே உண்மை.
குடும்பம் எனும் கட்டமைப்புதான் இந்த உலகத்தின் சிறந்த மகிழ்ச்சிக்கான வழி
மகிழ்ச்சியாய் வாழ குடும்பத்துடன் சேர்ந்திருங்கள் போதும் குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்யுங்கள் போதும்
ஆனந்தமாய் வாழ கோடி ரூபாய் தேவை இல்லை குடும்பத்தோடு வாழ்ந்தால் போதும்
கோடி ரூபாய் கொடுத்தாலும் குடும்பம் தரும் மகிழ்ச்சி எதுவும் தரப்போவதில்லை
மகிழ்ச்சியாக இருக்க பணம் எதுவும் தர தேவையில்லை குடும்பத்திற்குள் மட்டும்
மகிழ்ச்சியாக இருக்க பணம் தேவையில்லை என்பதை உணர்த்தும் இடம் நம் குடும்பம் மட்டுமே
தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் தந்தையும் வாழ்க்கை முழுவதையும் கொடுக்கும் தாயுமே குடும்பத்தின் ஆதாரமாகும்
குடும்பம் எனும் அமைப்பு உலகத்தில் விலைமதிப்பற்றது
குடும்பம் எவ்வளவு சிறப்பானது என்று உணர வேண்டும் என்றால் இங்கே கடவுள்களுக்கு கூட குடும்பங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்தால் இந்த உலகத்தில் குடும்பம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மால் உணர முடியும். வாழ்க்கையில் எல்லாம் முடிந்து வயதாகி போகும் போது சொந்த பந்தங்களின் நிழல்கள் நம் வாசலில் விழாதா, அவர்களோடு பேசி கழித்து நம் இறுதி நாட்களை கழித்து விட முடியாதா என்று ஏங்குபவர்கள் இந்த நாளிலும் அதிகம்.
எனவே குடும்பம் எனும் அமைப்பு சிதைப்படாமல் இருந்தால் தான் ஒவ்வொருவரின் இறுதி காலமும் நன்றாக இருக்கும்.
குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து தேய்ந்த ஆண்களின் ஆயுள் அதிசயமே
குடும்பத்தின் நலனுக்காக உழைத்து ஓய்ந்த பெண்ணின் வாழ்க்கை அற்புதமே
அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை என உறவுகளால் சூழ்ந்து இந்த உலக வாழ்க்கையை நிறைவு பெறுவதே நல்ல வாழ்க்கையாகும்
தன் பிள்ளைகள் சாப்பிட்டால் போதும் என்று பட்டினி கிடக்கும் அம்மாக்கள் அப்பாக்கள் ஏராளம்.குடும்பம் எனும் அமைப்பை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு மனநிலையை யாராலும் பார்க்க முடியாது.
வெளியே எவ்வளவு மரியாதையும் பணமும் புகழும் கிடைத்தாலும் ஒருவனுக்கு குடும்பம் சரியாக இல்லை என்றால் அவனுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்காது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படும் இதுவே குடும்பத்தின் சிறப்பு.
ஒரு குடும்பத்தில் எப்பொழுதும் தனித்தனியாக முன்னேற வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் குறைவாகவே இருக்கும் குடும்பமாக முன்னேற வேண்டும் என்ற எண்ணமே அதிகம்.
கூட்டு முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமே, குடும்பம் எனும் அமைப்புதான்
குடும்பம் எனும் கூட்டில் தான் இறைவனும் குடிகொண்டுள்ளார்.
நல்லதொரு குடும்பம் கவிதை
அம்மா அப்பா தாத்தா பாட்டி அக்கா அண்ணன் தம்பி தங்கை சித்தப்பா பெரியப்பா சித்தி பெரியம்மா என்று ஒரு கூட்டு குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகளின் மனநிலை எப்பொழுதும் சிறந்ததாகவே இருக்கும். அவர்களின் முடிவுகள் எப்பொழுதும் திடமானதாகவும் சரியானதாகவும் முடிந்தவரை தெளிவாகவும் இருக்கும் ஏனென்றால் அங்கு சொல்லித் தருவதற்கு 10 பேர் அன்பை அள்ளித் தருவதற்கு 100 கை என்று வாழ்ந்திருக்கிறார்கள்.
குடும்பம் எனும் கோவிலுக்காக உழைத்து களைத்த ஒவ்வொருவரும் சாமி தான்
குடும்பம் எனும் கூட்டிற்குள் வாழும் ஒவ்வொரு உயிரும் சுதந்திர பறவையே
மகிழ்ச்சி எனும் மலர் மலரும் இடம் குடும்பமே
அன்பால் இணைந்து அன்பால் பிணைந்து அன்போடு வளர்ந்து அன்பை எல்லோருக்கும் கொடுக்கும் இடம் குடும்பம்
உறவுகளின் மடியில் கிடைக்கும் மகிழ்ச்சி. உலகத்தின் எந்த விலையுயர்ந்த பொருட்களிலும் கிடைப்பதில்லை
குடும்பம் என்பது பத்தோடு பதினொன்று அல்ல; உலகில் உள்ள அத்தனையும் அது தான்
நாம் யாரையும் நேசிப்பதற்கு முன்பே நம்மை நேசிக்கும் சிலர் இருக்கும் இடம் குடும்பம்
நம் பிறப்பிற்கு முன்பே நம்மை எதிர்பார்த்து நம் மீது அன்பு செலுத்துவது குடும்பமே ஆகும்.
தோல்விகளால் நீங்கள் தோண்ட போது தோள் கொடுத்து உதவுவது உங்கள் குடும்பமே
சமையலறையில் நின்று தேய்ந்த அம்மாவின் கால்களுக்கும் அலுவலகத்திற்கு நடந்து ஓய்ந்த அப்பாவின் கால்களுக்கும் ஓய்வு கொடுக்க நினைக்கும் மகனின் கால்கள் உயர்ந்தது குடும்பம் எனும் பந்தத்தில்…
ரத்த சொந்தங்களால் இணைந்தது மட்டும் குடும்பம் அல்ல; உணவு பூர்வமாய் உள்ளத்தால் இணைந்த உறவுகளும் குடும்பமே…
What's Your Reaction?