தமிழ் கவிதை - Tamil kavithai
தமிழ் கவிதை - Tamil kavithai
தமிழ் கவிதை
சூழ்நிலைகள் மாறும்போது சிலரது வார்த்தைகளும் மாறும் வாழ்க்கையும் மாறும்
விதி வரைந்த பாதையில் விடை வி தெரியாமல் போகிறது என் வாழ்க்கை
செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்!
விடுதலையில்லா சட்டம் வேண்டும் உன் காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க
பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன்
வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனால்.. ஒரே நாளில் எதுவுமே மாறாது மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்
பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.
எல்லாமே சில காலம் தான் அது உறவாக இருந்தாலும் சரி உயிராக இருந்தாலும் சரி
பிடித்தமானவர்களை புகழாதீர்கள் விரும்புங்கள்
இயற்கையை நாம் வைச்சு செய்தால் இயற்கை திரும்ப நம்மளை வைச்சு செய் செய் என்று செய்துவிட்டு போய்விடும்
அடிக்கடி உரையாடல்கள்
இல்லை என்பதற்காக
உறவுகள் இல்லை
என்றாகிவிடாது
தன்னையும் பிறரையும் சரியாக உணரும் திறன் படைத்தவர்கள் தான் வாழ்க்கையில் மிகவும் எளிதாக முன்னேற முடியும்
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்
வாழ்வின் சில தருணங்களையெல்லாம் மீண்டும் உருவாக்க முடியாது நடக்கும்போதே இரசித்துக் கொள்ளுங்கள்
எத்தனையோ பாரங்களை சுமந்து
அத்தனையும் சுகங்களாக மாற்றி
தன்னையே தொலைத்து
நிற்பவள் மனைவி மட்டுமே
பலரை சில காலமும் சிலரை பல காலமும் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை
மரணம் இல்லாமல் வாழ ஆசைதான்
மண்ணில் அல்ல உன் மனதில்
லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.
காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை சிலரின் மாற்றங்கள் போதும்
மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு
பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க
ஒரு பெண்ணுக்கு நீ கொடுக்கும் மரியாதை உன் தாயின் வளர்ப்புக்கு தரப்படும் சான்று
அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளது கண்ணியமானதும் கூட
படிப்பு கற்றுத்தருவதை விட
சில உறவுகளின் நடிப்பு
சிறப்பாக கற்று கொடுக்கின்றது
வாழ்க்கையை
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்
உயர்ந்த இடத்தில் ஆளில்ல உயர்த்தி விடவும் ஆளில்லை உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு
நீ நிலவு
அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான்
உன்னை ரசிக்க முடியும்
தனிமை நாமாக தேடி சென்றால் அது அருமை தாமாக தேடி வந்தால் அது வெறுமை
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிர், நேரம் பேசிய வார்த்தை
வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை வெற்றியோ தோல்வியோ நிற்காமல் சென்று கொண்டே இருங்கள்
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்
வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது
நன்றி…….
What's Your Reaction?