காதல் தோல்வி கவிதைகள் - LOVE FAILURE QUOTES IN TAMIL

Love failure quotes in tamil

Dec 6, 2024 - 14:57
 0  32
காதல் தோல்வி கவிதைகள் -  LOVE FAILURE QUOTES IN TAMIL





காதல் தோல்வி கவிதைகள்

காதலால் கிடைக்கும் இன்பத்தை விட அதனால் கிடைக்கும் வலி அதிகம். 

காதல் தோல்வி கவிதைகள்

Love failure quotes in Tamil

காதல் ஒரு அற்புதமான உணர்வு என்றாலும் அதில் பிரிவு என்பது வலி மிகுந்த ஒன்றாக உள்ளது. தற்போது நிறைய காதல் ஜோடிகள் பிரேக்அப் செய்து கொள்கிறார்கள். இருபக்கமும் இந்த பரஸ்பர முடிவு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி இருப்பதில்லை. ஒருவர் மட்டும் காதலில் மீள முடியாமல் தவிப்பது உண்டு. உயிருக்கும் மேலாக நேசித்து விலகிய வலிகள் நிறைந்த காதல் தோல்வி ( Love Failure Quotes in Tamil ) கவிதைகளை இந்த பதிவில் காணலாம்.

பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது, நீ இல்லாத இரவுகளில்! 

நம்ம இல்லாம சந்தோஷமா இருப்பாங்கன்னா... விலகியும் போகலாம், விட்டும் போகலாம். தப்பே இல்ல. போகட்டும் விடுங்க. 

யார் இருந்தாலும் இல்லாத உன்னை தான் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறது மனசு. 

எண்ணம் போல் வாழ்க்கை அமையவில்லை என்றாலும் என் எண்ணத்தில் என்றும் வண்ணம் நீ தான். 

நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்! 

பெரியதாய் காரணம் ஒன்றும் இல்லை உன் பிரிவு ஒன்றை தவிர என் வலிகளுக்கு. 

 

 

 

 

 

உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஓர் உயிர் நம்மை மறந்து போகும் போது. 

அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு 

கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில் காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில். 

அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்கள் 

நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும் 

சில நினைவுகள் நம்மை அழ வைக்கும் சிலருடைய நினைவுகள் அழ மட்டுமே வைக்கும் 

வேண்டும்போது கிடைக்காத காதலும் வேண்டாத போது கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான் !!! 

காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் அழ வைக்கும்...!!! 

பிறப்பில் இருந்து இறப்பு வரை பிரிவில் தான் முடிகிறது காதல் மட்டுமே பிரிந்தும் பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.! 

மறக்க நினைக்கிறேன் உன்னோடு பேசாத நாட்களை அல்ல.. உன்னோடு பேசிய அந்த நாட்களை..! 

மேலும் பார்க்க

உன்னோடு விரல் கோர்த்து நடந்த வழிகளை இன்று பார்க்கும் போது வழிகள் அனைத்தும் வலிகளாகவே தெரிகின்றது !! 

 

உனக்காக எத்தனை முறை அழுதாலும் கண்ணீர் மட்டும் குறைவதாயில்லை 

 

பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை ! 

 

அன்பு எவ்வளவு அழகானது என்று உன்னிடம் அறிந்தேன். அதே அன்பு எவ்வளவு வலிகளை தரும் என்பதையும் உன்னிடமே அறிந்தேன். 

 

இன்று நீ விலகியதற்காக மட்டும் அல்ல அன்று உன்னை விரும்பியதற்காகவும் வருந்துகிறேன் உண்மையில்லா உன் அன்பை உயிராய் நினைத்ததை எண்ணி.. 

 

வாழ்க்கை வாழ்வதற்கு இருக்கும் வழிகளை விட, சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளே இங்கு அதிகம்..!!! 

மேலும் பார்க்க

சிரிப்பதால் வலியை மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல! மறைத்து விட்டேன் அவ்வளவு தான்! 

பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது. 

உண்மையாக நேசித்த ஒருவருடைய இழப்பால் இழந்த அன்பு வேறு ஒருவராலும் ஈடு செய்ய முடியாதது 

பிரிவுகளை சந்திக்கும் போது தான் சில உறவுகளை பற்றி சிந்திக்க முடிகிறது. 

உன்னை நினைத்து என்னை மறந்தேன்! எதை நினைத்து என்னை நீ மறந்தாய்! 

காதலுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுங்கள் நம்மை காதலிக்கும் ஒருவரை தவிர ! 

உன் நினைவின் பாரம் தாங்காமல் வெளியே சென்று கொண்டிருக்கும் கண்ணீரின் தேடல் நீ மட்டும்தான். 

கனவும் கற்பனையும் நீ தந்தது, வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது! 

காதல் தோல்வி கவிதைகள் ( Love Failure Quotes in Tamil ) 

 

 

 

Love Failure Quotes in Tamil

காதல் தோல்வி கவிதைகள் ( Love Failure Quotes in Tamil ): எப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்றால் அது உணர்வுகள் தான். அதிலும் காதல் உணர்வுகள் என்றால் உணர்ச்சிவசப்படாதவர்கள் என்று யாரும் கிடையாது. பிரேக்அப்பிற்கு பிறகு நிறைய காதல் ஜோடிகள் தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. மேலும் அவர்கள் மதிப்பற்றவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். காதல் பிரேக்அப் ஏற்பட்ட உடனே வாழ்க்கையே போய் விட்டது என்று மூழ்காதீர்கள். காதல் உணர்வுகள் அழகான ஒன்று தான். ஆனால் அதை உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். இல்லையென்றால் நீங்கள் பிரிவில் இருந்து மீண்டு எழ பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பதை விடுத்து அதிலிருந்து மீள முயற்சி செய்யலாம்.

காதல் பிரேக்அப்பிற்கு பிறகு உங்க இதயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர விரும்பியதைச் செய்து மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளை செய்யுங்கள். இது உங்க மனதை காயத்திலிருந்து மற்றும் வலியிலிருந்து விலக்கிக் கொள்ள உதவும், மேலும் ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரது வாழ்க்கையிலும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் அந்த வலிகளை உணர்த்தும் வகையிலும் மற்றும் காதல் தோல்வி அடைந்தவர்களின் வலியைக் கூறும் வகையிலும் காதல் தோல்வி கவிதைகள் ( Love Failure Quotes in Tamil ) பதிவிட்டுள்ளோம்.

இப்போதே டவுன்லோட்

Download Now

காதலால் கிடைக்கும் இன்பத்தை விட அதனால் கிடைக்கும் வலி அதிகம். 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow