விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம்? அதன் சுவாரஸ்யமான வரலாறு!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கதைகள் மற்றும் பாலகங்காதர திலகரின் வரலாற்றுப் பின்னணி குறித்த சிறப்புத் தொகுப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த விழாவைக் கொண்டாடுவதன் பின்னணியில் பல சுவாரஸ்யமான கதைகளும் வரலாறும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
1. விநாயகர் அவதரித்த வரலாறு பார்வதி தேவி தான் நீராடுவதற்கு முன்பாக, சந்தனக் கலவையால் ஒரு சிறுவனின் உருவத்தைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். கதவிற்குக் காவலாக நின்ற அந்தச் சிறுவன், சிவபெருமானையே உள்ளே செல்ல அனுமதிக்காததால் கோபமடைந்த சிவன் அவனது சிரச்சைத் துண்டித்தார். பின்னர் பார்வதி தேவியின் வருத்தத்தைப் போக்க, வடக்கே தலைவைத்து படுத்திருந்த ஒரு யானையின் தலையைப் பொருத்தி அவருக்கு மீண்டும் உயிரளித்தார். அந்த நாளே 'விநாயகர் சதுர்த்தி'யாகக் கொண்டாடப்படுகிறது.
2. மகாபாரதமும் விநாயகரும் மகாபாரதக் காவியத்தை வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமான் தன் தந்தங்களில் ஒன்றை உடைத்து அதை எழுத்தாணியாகக் கொண்டு இடைவிடாமல் எழுதிய தொடக்க நாளாகவும் விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது.
3. வரலாற்றுப் பின்னணி: சுதந்திரப் போராட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஆன்மீகத் திருவிழாவாக மட்டுமே இருந்த விநாயகர் சதுர்த்தியை, மக்களின் ஒற்றுமைக்கான பொது விழாவாக (திலகர் பாணி பொதுக் கொண்டாட்டம்) மாற்றியவர் தியாகி பாலகங்காதர திலகர். 1893-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், மக்கள் அனைவரும் ஒன்று கூடுவதைத் தடுக்க சட்டங்கள் இருந்தன. அப்போது மக்களை ஆன்மீகத்தின் பெயரால் ஒன்று திரட்டி சுதந்திர உணர்வை ஊட்டவே வீதிதோறும் விநாயகர் சிலைகளை வைத்துப் பொது விழாவாகக் கொண்டாடத் தொடங்கினார்.
களிமண் விநாயகரும் விசர்ஜனமும்: நாம் செய்யும் பிரார்த்தனைகளும், இயற்கை தந்த பொருட்களும் மீண்டும் இயற்கையோடு கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே களிமண்ணால் செய்த விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் (விசர்ஜனம்) வழக்கம் உருவானது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0