உப்புமா கட்... சாம்பாருடன் பொங்கல்... காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்... பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
மாவட்டம்தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் உரிமைத் துறை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக கூறினார்.
குறிப்பாக, காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வகுப்பறை ஈடுபாடு மற்றும் அதிகரித்து உள்ளதாக திட்டக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், வரும் ஆண்டில் காலை உணவு திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார். மேலும், புதுமைப் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்
குறிப்பாக, 10 இடங்களில் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக கூறிய அவர், மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் பதில் அளித்தார்.
What's Your Reaction?






