வாதத்தை குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள் என்ன?
Vadham kuriya tips in tamil

வாதத்தை குறைக்க ஆயுர்வேதம் சொல்லும்
வழிகள் என்ன?
வாத தோஷம் அதிகரிக்கும் போது தான் பதட்டம் அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். கொரோனா தொற்று நமக்கு வந்துவிடுமோ என்ற பதட்டம் தான் நிறைய பேருக்கு இருக்கிறது. அதைக் குறைப்பதற்கான வழியையும் ஆயுர்வேதம் நமக்குச் சொல்லியிருக்கிறது.
வாத உடம்பு உள்ளவர்களை கொரோனா தாக்குமா? வாதத்தை குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள் என்ன
வாத தோஷம் அதிகரிக்கும் போது தான் பதட்டம் அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். கொரோனா தொற்று நமக்கு வந்துவிடுமோ என்ற பதட்டம் தான் நிறைய பேருக்கு இருக்கிறது. அதைக் குறைப்பதற்கான வழியையும் ஆயுர்வேதம் நமக்குச் சொல்லியிருக்கிறது. அது என்ன என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வாதம் அதிகமானால் என்னவாகும்?
ஆயுர்வேதத்தின்படி, வாத தோஷம் அதிகரிக்கும்போது அடிப்படையில் பதற்றம் அல்லது கவலை உண்டாகிறது. ஆகவே பதற்றம் அல்லது கவலையை குணப்படுத்துவதற்கு முதலில் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்களை சமநிலையில் வைத்துக் கொள்வது அவசியம். பதட்டம் என்பது மனிதனுக்கு பிடிக்காத ஒரு உணர்வு. ஆனால் ஒவ்வொரு மனிதனும் பதற்றம் கொள்ளாமல் இருப்பதில்லை. ஒரு மனிதன் கவலை அல்லது பதற்றம் கொள்வதால் அவனுடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகிறது. அப்படி பதற்றம் ஏற்படுகிற பொழுது எந்த வேலையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. எதைப் பார்த்தாலும் ஒருவித எரிச்சல் உண்டாகும்.
ஆயுர்வேத தீர்வு
ஆயுர்வேதத்தின்படி, வாத தோஷம் அதிகரிக்கின்ற பொழுது, அதனை அடிப்படையாகக் கொண்டு, பதற்றம் அல்லது கவலை உண்டாகிறது. ஆகவே பதற்றம் அல்லது கவலையை குணப்படுத்துவதற்கு முதலில் தோஷங்களை சமநிலையில் வைத்துக் கொள்வது அவசியம். ஆயுர்வேதத்தின்படி தோஷங்கள் மூன்று வகைப்படும். வாதம், பித்தம் கபம். உடலில் தோன்றும் அனைத்து பாதிப்புகளும் இந்த மூன்றில் அடங்கும். இவற்றின் சமநிலை ஒரு ஆரோக்கியமான உடலைப் பெற்றுத் தரும்.
சமநிலையின்மைக்கு காரணம்
வாத தோஷம் அதிகரிக்க சில குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகும். உதாரணமாக, தாமதமான நேரம், ஒழுங்கற்ற வேலை அட்டவணை, குளிர்ச்சியான சூழல், அதிக வேலை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு ஆகிய அனைத்தும் வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இன்றைய மாறிவிட்ட உணவுமுறையும் தூக்க முறையுமே நம்முடைய உடலின் சமநிலையற்ற தன்மைக்குப் பெரும் காரணமாக அமைகின்றன. உங்கள் தோஷங்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் கவலையை அமைதிப்படுத்த உதவும் சில எளிய ஆயுர்வேத வைத்தியங்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடல் தசைகளையும் உங்கள் மனதையும் தளர்த்த உதவும். குறிப்பாக பதற்றத்தைப் போக்க குளிக்கும்போது, ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு இஞ்சி, மூன்றில் ஒரு பங்கு பேக்கிங் சோடா ஆகியவற்றை எடுத்து ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குளிக்கவும். இந்த நீரில் 10-15 நிமிடம் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாதம் தீர்க்கும் வாதுமை
“ வாதம் தீர்க்கும் வாதுமை” என்று ஒரு வாக்குண்டு. ஆம் நம்முடைய உடலில் வாத தோஷத்தைச் சமநிலைப்படுத்தி வைப்பதில் பாதாமிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால் அதை நேரடியாக சாப்பிடாமல் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. 10 பாதாம் பருப்பை முதல்நாள் இரவே நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை பாதாமின் தோலை உரித்துவிட்டு அரைத்து, ஒரு கப் பாலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் குங்குமப்பூ போன்றவற்றை சேர்க்கவும் . இந்த பாலை தினமும் பருகி வரவும். பாதாமின் தோலில் ஒருவித விஷத்தன்மை இருக்கும். அதனால் தான் 8 மணி நேரமாவது ஊறவைத்து தோல்நீக்கி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சூப் போன்ற உணவுகள்
ஆயுர்வேதத்தின்படி நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் தோஷங்ளை சமன்செய்யலாம் அல்லது அவற்றுள் பாதிப்பை உண்டாக்கலாம். வாதத்தில் உள்ள பாதிப்பைப் போக்க, குறிப்பாக பதற்றத்தைத் தணிக்க வெதுவெதுப்பான, ஈரப்பதமுள்ள, எண்ணெய் குறைந்த உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சூப் , சூடான தானியங்கள், பால் பொருட்கள், பிரட் , பாஸ்தா போன்றவற்றை உட்கொள்ளலாம். காபி, மது , சர்க்கரை, சாக்லேட், நிகோடின் போன்றவற்றைத் தவிர்க்கவும். சிற்றுண்டியாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். வாத தோஷத்தை சமன் செய்யக்கூடிய மற்ற பொருட்கள், பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், கல் உப்பு, எள்ளு, பெருங்காயம், இயற்கை சர்க்கரை, சோம்பு போன்றவையாகும்.
அரோமாதெரபி
வாதத்தில் உண்டான பாதிப்பைப் போக்கி அமைதிப்படுத்த சில வாசனைகள் உதவும். பேசில் இலைகள், ஆரஞ்சு, லவங்கம், லாவெண்டர் எண்ணெய் போன்றவை நல்ல பலனை அளிக்கும். லாவெண்டர் எண்ணெய்யை நீரில் சில துளிகள் சேர்த்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லையென்றால் எள் எண்ணையைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு நாள் குளித்து வாருங்கள். உடல் சூடு தணிந்து உடல் தோஷங்கள் சமநிலைக்கு வரும்.
பிராணாயாமம்
பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி செய்வதால் நரம்பு மண்டலம் இதமான உணர்வைப் பெறுகிறது. உங்களை எப்போதும் ஒருவித பதட்ட மனநிலையிலிருந்து வெளியில் கொண்டு வரும். நரம்பு மண்டலங்கள்சீராக செயல்பட்டு, மூளைக்குள் ஒரு வித அமைதி நிலையை உண்டாக்கும். மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவில் ஆற்றல் சமநிலைப்படுத்தப்படுகிறது. நமக்கு வாத, பித்த, கபம் சமநிலையில் இல்லையே. பதட்டமும் மன அழுத்தமும் அதிகமாக இருக்கிறதே, கொரோனா போன்ற வாத சமநிலையின்மையால் உண்டாகும் நோய்த்தொற்றுக்கள் தாக்கக்கூடுமா போன்ற பயத்தை இன்றோடு விட்டொழியுங்கள். மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
What's Your Reaction?






