ரசிகர்கள் இதயம் கவர்ந்த ’உதயம்’ தியேட்டர்… முடிவுக்கு வரும் சென்னையின் 42 வருட அடையாளம்! - UDHAYAM THEATRES CLOSED
Udhayam Theatres closed: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த உதயம் திரையரங்கம் இன்று இடிக்கப்படவுள்ளது.

சென்னை:
இதன் காரணமாக உதயம் திரையரங்கம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாந்தி, ஏ.வி.எம் ராஜேஸ்வரி, பிரார்த்தனா, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம், அகஸ்தியா ஆகிய திரையரங்குகளின் வரிசையில் உதயம் தியேட்டரும் மூடப்படுவது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் இன் தேதி உதயம் திரையரங்கம் இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் அப்பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்து பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.த்தது.
எம்.ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கில், ரஜினிகாந்த் நடித்த ’சிவப்பு சூரியன்’ திரைப்படம் முதலில் திரையிடப்பட்ட திரைப்படமாகும். இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் உதயம் திரையரங்கில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது.
உதயம் திரையரங்கம் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரைகளை கொண்ட மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கம் ஆகும். தமிழ் சினிமாவில் பல காட்சிகள் உதயம் திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த உதயம் தியேட்டர் எந்த அளவிற்கு பிரபலம் என்றால் அஜித் நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ என்ற படத்தில் ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்தை தொலைத்தேன்’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
சென்னையின் மையப்பகுதியில் இருந்தாலும், சாமானிய மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து படம் பார்க்கும் அளவிற்கு டிக்கெட் கட்டணம் உதயம் திரையரங்கில் குறைவாக இருந்தது. உதயம் திரையரங்கில் தொடங்கப்பட்ட போது டிக்கெட் விலை இரண்டரை ரூபாயாக இருந்ததாக கூறப்படும் நிலையில், கடைசியாக 120 ரூபாய் விற்கப்பட்டது. கால மாற்றம், மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தின் புதுப்பிப்பு, ஓடிடி தளங்கள் ஆதிக்கம் ஆகியவற்றால் உதயம் தியேட்டருக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக உதயம் திரையரங்கம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாந்தி, ஏ.வி.எம் ராஜேஸ்வரி, பிரார்த்தனா, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம், அகஸ்தியா ஆகிய திரையரங்குகளின் வரிசையில் உதயம் தியேட்டரும் மூடப்படுவது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் இன்று தேதி உதயம் திரையரங்கம் இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் அப்பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்து பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.
மேலும் அங்கு தியேட்டர் இருந்த இடத்தில் குடியிருப்பு பகுதிகள் வர உள்ளதாக கூறப்படுகிறது
What's Your Reaction?






