மாதவன் - நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்த 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும். சசிகாந்த் இயக்கிய இப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Mar 6, 2025 - 11:25
 0  2
மாதவன் - நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?
மாதவன், நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

YNOT Studio தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சசிகாந்த் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’.

இந்தப் படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். பாடகரான அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 4-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான டீசரை பார்க்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதை காட்சிகள் உணர்த்துகின்றன. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக டீசரின் மூலம் கணிக்க முடிகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.