கவிதைகள்
தமிழ் கவிதை

நிமிர்ந்து நில்........
வளைந்து கொடுக்கும் நாணலை விட
நிமிர்ந்து நிற்கும் ஆலமரமே
நிழல் தருகிறது
உணர்ந்துகொள்ளும் மனிதா
நீ நிமிர்ந்தே நிற்க
முதுகுத்தண்டு வேண்டும்
மண்ணையும் விண்ணையும் கண்டு
இரும்பையும் எரும்பையும் பார்த்து
சிந்தனையைக் கேள்
கடித்திட்டால் கரும்பு இனிக்கிறது
வழிமறித்திட்டால் யானையைக் கூட
எறும்பு கடிக்கிறது
மண்ணில் சிறந்த தாது
சோதனையின் வேதனை தாங்கி
இரும்பாய் நிலை நிற்கிறது
எழுத்தாணியை விட என்ன வேண்டும்
உதாரணம் களைப்பில்லாமல் கம்பீரமாய்
நிமிர்ந்தே உழைக்கிறதே
ஆனாலும் ஏன் அச்சப்படுகிறாய்
அச்சத்தின் மரணமே உச்சமென்று
தெரியாதா
அதிகாரம் நசுக்கிட்டால் அழிந்துபோகும் கனி
விருட்சமாகும் விதை
துணிந்தே செல்
அனைத்துலகும் சேர்ந்தாலும் ஆற்றலை
அழித்துவிட முடியாது
நிமிர்ந்தே நில்…
What's Your Reaction?






