பன்னாட்டு விண்வெளி மையம்

விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே பன்னாட்டு விண்வெளி மையம் (ப.வி.மை) ஆகும். அது தாழ்வான புவி வட்டப்பாதையில் சுமார் 400 கிமீ தொலைவில் இயங்குகிறது. அது ஒரு அறிவியல் ஆய்வகமாகவும் செயல்படுகிறது.

Mar 19, 2025 - 10:48
Mar 19, 2025 - 10:32
 0  2

1.

அதன் முதல் பகுதி 1998-ஆம் ஆண்டில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் முக்கியப்பகுதிகளின் கட்டுமானம்   2011-ல் முடிக்கப்பட்டது. விண்ணிலுள்ள பொருள்களில் வெறும் கண்ணால் பார்க்கப்படக்கூடியமனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள் இதுவே ஆகும். இம்மையத்திற்கு முதன் முதலாக 2000-ஆம் ஆண்டுதான் மனிதர்கள் சென்றனர். அதன் பிறகுஒருபொழுதும் அதில் மனிதர்கள் இல்லாமல் இருந்தது இல்லை.ஒருகுறிப்பிட்ட நாளில்குறைந்தது ஆறு மனிதர்கள் அங்கு இருப்பார்கள். தற்போதைய திட்டப்படி 2024-ம் ஆண்டுவரை பன்னாட்டு விண்வெளி மையமானது இயக்கப்படும் என்றும்தேவைப்பட்டால் 2028 வரை இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு அது சுற்றுப்பாதையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படலாம் அல்லது அதன் சில பகுதிகள் வருங்கால விண்வெளி மையங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.

2. பன்னாட்டு விண்வெளி மையத்தின் பயன்கள்

பன்னாட்டு விண்வெளி மையத்தின் பயன்கள்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் பார்வையில் கீழ்கண்ட வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையம் நமக்கு பலனை அளித்துள்ளது (அல்லது வருங்காலங்களில் அளிக்கக்கூடும்).

நீர் சுத்திகரிக்கும் முறைகள்

பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிக்கும் முறைகளைப் பெறலாம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் வழிமுறையாக இது இருக்கக் கூடும். பன்னாட்டு விண்வெளி மையத்திற்காக (ISS) உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவைஈராக் நாட்டில்சுத்தமான குடிநீர் இல்லை என்பதால்மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தைக் காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளன.

கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்

நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டகண்ணைத் தொடரும் கருவி பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. இயக்கக்குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த கண்ணைத் தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாகதீவிர இயக்கக் குறைபாடுள்ள ஒரு குழந்தைஅதன் கண் அசைவுகளை மட்டுமே வைத்து அன்றாட செயல்பாடுகளை செய்து கொண்டு யாரையும் சார்ந்திராத வாழ்க்கையை வாழ இயலும்.

தானியங்கி கைகள் (robotic arms) மற்றும் அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை (.காமூளைக் கட்டிகள்) நீக்குவதற்கும் மிகத் துல்லியான முறையில் உடல்திசு ஆய்வு செய்வதற்கும் (biopsy), பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்குத் துணையாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டதானியங்கி கைகள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய கருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

இவற்றைத் தவிரவும் இன்னும் பல வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. அவையாவன: மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல்மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைஅணுகமுடியாத பகுதிகளுக்குள் செல்வதற்கான மீயொலிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல.

3. பன்னாட்டு விண்வெளி மையமும் பன்னாட்டு கூட்டுறவும்

பன்னாட்டு விண்வெளி மையமும் பன்னாட்டு கூட்டுறவும்

பன்னாட்டு விண்வெளி மையத்தின் அறிவியல் சாதனைகளுக்கு சற்றும் குறையாத சாதனை என்னவென்றால் இந்த மையத்தை உருவாக்குவதற்குத் தேவைப்பட்ட பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகும். பன்னாட்டு வின்வெளி மையத்தை இயக்குவதற்கும்பராமரிப்பதற்கும் 16 வெவ்வேறு நாடுகளின் ஐந்து விண்வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. அந்நிறுவனங்களாவன: NASA (அமெரிக்கா), Roskosmos (ரஷ்யா ), ESA (ஐரோப்பா), JAXA (ஜப்பான்)மற்றும் CSA (கனடா). பெல்ஜியம்பிரேசில்டென்மார்க்பிரான்ஸ்ஜெர்மனிஇத்தாலிஹாலந்துநார்வேஸ்பெயின்சுவீடன்சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் உள்ளன.

4. நினைவில் கொள்க

அண்டத்தின் அடிப்படைக் கூறுகளாக உள்ள விண்மீன் திரள்கள் கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.

 பெரு வெடிப்பு எனப்படும் மாபெரும் வெடித்தல் நிகழ்விலிருந்தே இவ்வண்டம் தோன்றியிருக்கக்கலாம் என்று அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர்.

 தோற்றத்தைப் பொருத்து சுருள்நீள்வட்டமற்றும் ஒழுங்கற்ற (வடிவமற்ற) விண்மீன் திரள்கள் என அவை வகைப்படுத்தப் படுகின்றன.

 சூரியன் மற்றும் அனைத்துக் கோள்களும் பால்வெளிவீதி விண்மீன் திரளில் உள்ளன.

 கற்பனை வடிவத்தையோஅர்த்தமுள்ள தோற்றத்தையோ நினைவுறுத்தும் விண்மீன் தொகுப்பு விண்மீன் குழுக்கள் எனப்படும்

 சூரியன் மற்றும் அதைச் சுற்றி இயங்கும் வான் பொருள்கள் சூரிய மண்டலம் எனப்படும்

 சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருப்பதால்பூமியில் சரியான வெப்பநிலைநீர் இருப்பு மற்றும் சரியான வளி மண்டலமும் ஓசோன் படலமும் உள்ளன.

 அதி நீள்வட்டப் பாதையில் நம் சூரியனைச் சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால் விண்மீன்கள் எனப்படும்.

  ஒரு சுற்றுப்பாதையில் கோளைச் சுற்றி வரும் பொருள் துணைக்கோள் என்றழைக்கப்படும்

 அறிவியல் ஆய்வகமாகவும்வானோக்கு நிலையமாகவும் செயல்படும் வண்ணம் பன்னாட்டு விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கம்விண்ணில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பன்னாட்டு ஆய்வகமாகச் செயல்படுவது ஆகும்.

5. சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!! Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2015/facts-figures-about-international-space-station-008371.html

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!  Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2015/facts-figures-about-international-space-station-008371.html

கால்பந்து மைதானம் அளவு

    சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளமும், அகலமும் ஓர் கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக இருக்கும்.

வருகையாளர்கள் எண்ணிக்கை

    ஏறத்தாழ உலக நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ஆராய்ச்சியாளர்கள் சென்று வரும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் இருந்து மட்டுமே 140 பேர் சென்று வந்துள்ளனர். அடுத்ததாக ரஷ்யாவில் இருந்து இதுவரை 44 ஆராய்ச்சியாளர்கள் சென்று வந்துள்ளனர்.

ஸ்பேஸ் வாக்ஸ் (Spacewalks)

    ஸ்பேஸ் வாக் என்பது விண்வெளியில் நடப்பது ஆகும். இதுபோன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 187 ஆராய்ச்சியாளர்கள் ஸ்பேஸ் வாக்ஸ் செய்துள்ளனர்.அதில் 140 பேர் அமரிக்கர்கள், மற்றும் 47 பேர் ரஷ்யர்கள் என்று கூறப்படுகிறது.

சோலார் சக்தி

சர்வதேச விண்வெளி நிலையம் சூரிய சக்தியில் இயங்கிவருகிறது.

52 கணினிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசாவின் 52 கணினிகள் தான் கட்டுப்படுத்தி, செயல்படுத்தி வருகிறதாம்.

ரஷ்ய ஆய்வு மையத்தை விட பெரியது

சர்வதேச விண்வெளி நிலையமானது நான்கு மடங்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை விட பெரியதாம். மற்றும் ஐந்து மடங்கு அமெரிக்க ஸ்கைலேபை விட பெரியதாம்

மில்லியன் வரிகள்

     சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்க உதவ 3.3 மில்லியன் வரிகள் அடங்கிய மென்பொருள் கோடுகள் (Code) எழுதப்பட்டுள்ளன. விமான வழி இயக்கத்தை உதவ 1.8 மில்லியன் வரிகள் அடங்கிய மென்பொருள் கோடுகள் (Code) எழுதப்பட்டுள்ளன.

மைல் தூரம்

    மின் சக்தியை இணைக்க 8 மைல் தூரம் கொண்ட எலக்ட்ரிக் ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறதாம்.

ஒரு மில்லியன் பவுண்ட்

           சர்வதேச விண்வெளி நிலையத்தின் எடை ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆகும். கிலோ கணக்கில் என்றால், ஏறத்தாழ 4,50 ,000 கிலோ எடை ஆகும்.

மின் சக்தி தயாரிப்பு

     சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சூரிய சக்தியைக் கொண்டு 84 கிலோ வாட்ஸ் மின் சக்தி தயாரிக்கப்படுகிறதாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.