சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர்.. எப்படினு தெரிஞ்சா கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க!
திறன்மிக்க தொழிலதிபர்கள் கூட சொந்தமாக ரயில் வைத்திருக்காத நிலையில், சொந்தமாக ரயில் வைத்திருக்கும் இந்தியர் குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.

லூதியானா-சண்டிகர் ரயில் பாதைக்காக, 2007-ஆம் ஆண்டு ரயில்வே சில நிலங்களைக் கைப்பற்றியது. அதில், கட்டானா (Katana) கிராமத்தை சேர்ந்த சம்பூரன் சிங்கின் (Sampooran Singh) நிலமும் அடங்கும்.
ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் மட்டுமே வழங்கி ரயில்வே துறை நிலத்தைக் கையகப்படுத்தியதைக் கண்டறிந்தார் சம்பூரன் சிங். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 2015ஆம் ஆண்டு சட்டத்தை நாடி அதில் வெற்றியும் பெற்றார். அவருக்கு ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ரயில்வே ரூ.42 லட்சத்தை மட்டுமே வழங்கியது சம்பூரன் சிங்கிற்கு விரக்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தை சம்பூரன் சிங் நாடினார். இதைத் தொடர்ந்து 2017-ல், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பால் வர்மா வழங்கிய தீர்ப்பில், செலுத்தப்படாத தொகையை திரும்பப் பெறுவதற்காக டெல்லி-அமிர்தசரஸ் ஸ்வர்ன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் லூதியானாவின் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தையும் ஜப்தி செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, லூதியானா ரயில் நிலையத்திற்குச் சென்ற சிங், ரயிலின் உரிமையைப் பெற்றார். பெரிய பெரிய தொழில்துறை குழுக்களால் கூட அடைய முடியாத ஒரு ரயிலின் உரிமையை இந்தியாவில் பெற்ற ஒரே நபர் என்ற பெயரை சம்பூரன் சிங் பெற்றார். இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரயில் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டது. இதனால், சம்பூரன் சிங் 5 நிமிடங்கள் மட்டுமே ரயிலின் உரிமையாளராக இருந்தார். இந்த தனித்துவமான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு தனித்துவமான சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சம்பூரன் சிங்கின் பெயர் வரலாற்றில் சதாப்தி எக்ஸ்பிரஸின் ரயில் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?






