கண்ணா உன்னை தேடுகிறேன் ...- Love for Krishna Quotes in Tamil
Radha Krishna tamil whatsapp status, Radha Krishna love quotes in tamil
1.

சிலையாக நான் கண்ட ஓவியம் நீயே கண்ணா !
உன்னை கண்டு சிலையான பேதை கண்ணா !
2.

என் தனிமை துயர் உணர்ந்து
வந்தவனே கண்ணா! கண்ணா !
புது புது ராகங்கள் இசைத்து
எந்தன் உயிர் மீட்டாயடா !
3.

பூவிதழ் சிரிப்பினிலே மெய்மறந்தேன் கண்ணா !
பின்னி பின்னி அடிமேல் அடியெடுத்து வந்தாய் கண்ணா!
உன் நடைக்கண்டு என் நடை மறந்தேனடா!
4.

வெண்ணை உண்டு சிரிக்கும் அழகை
காண கோடி கண்கள் வேண்டும் கண்ணா !
5.

உன் குழலூதும் இசையினிலே
மயங்காதோர் உண்டோ கண்ணா !
6.

என் தலை நிமிர்த்தி உன் கண்கள்
சொன்ன செய்தி நானும் அறியேன் கண்ணா !
7.

என் இதழ் பிரித்து உரைக்கும் முன்னே
உன் கைகள் நீட்டி தலை சரித்து அழைத்தாயடா !
8.

நித்தம் முத்தம் கேட்கிறாய் கண்ணா!
முத்து முத்தம் கொடுத்து மகிழ்ந்தேன் கண்ணா !
உயிர் தீண்டும் முத்தம் கேட்டாயடா ?
நீ கேட்டு மறுக்கும் நிலை வந்ததேன் கண்ணா?
மறுத்த கண்களை விட்டு மறைந்தாயடா!
கண்ணீரில் தவிக்கவிட்டு எங்கு சென்றாய் கண்ணா ?
நீ சிறிது நேரம் இல்லாவிடில் என் சிந்தை கலங்குதடா கண்ணா !
9.

கண்ணாமூச்சி ஏனடா கண்ணா !
இனிமையானவனே கண்ணா கண்ணா ! குழலூதும் கண்ணா வாடா!
கார்மேகம் கண்ணா வாடா!
என் மைவிழிகள் மைதீட்டவே வந்திடு கண்ணா !
உயிர் துடிக்க அழைக்கும் பேதை
உயிர் கொடுக்க வா வா கண்ணா ...!
10.

குறும்பாக பின்னின்று அனைத்தாயடா !
மறைந்து நின்று விழிகள் மூடிய கரங்கள் கண்கள் திறந்தால் மறைவாயோ கண்ணா!
என் கலக்கம் உணர்ந்து உன் மடி ஏந்தினாய் கண்ணா !
11.

உனக்கு நான் எல்லையாக
எனக்கு நீ எல்லையாக இருந்திடு கண்ணா!
12.

உன் உச்சிதனை முகர்ந்திடவே ஆவல் கொண்டேனடா!
இதழ் முத்தம் தர சேயாக வருவாயோ கண்ணா !இல்லை
என்னை குழந்தையாக வரம் தா கண்ணா !
வரம் தா கண்ணா ! வரம் தந்திடு கண்ணா..!!!
13.

சித்திரை சோலையிலே
சித்திரை நிலவாய் அவன் முகமும்
சிந்தை மயங்குதடி ........
என் மன சட்டத்தில்
சித்திரமாய் நின்றானடி....
சின்ன கண்ணன் அழகுமுன்
சித்திரை நிலவும் தோற்றதடி.....
14.

நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...
நிமிடமும் விலகாமல்
பின்தொடர கண்டேன்...
அதுநீயென அறிந்து
மனம் கனிந்தேன்...
நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...
என்தன் ஹிருதயம்
நீயென மகிழ்ந்தேன்...
மனமெங்கும் ஆனந்தம்
திளைப்பதை ரசித்தேன்...
சிறகற்ற பறவையாக
உயரம் பறந்தேன்...
உச்சி வானில்
உலகம் மறந்தேன்...
இதயம் இறகாக
மகிழ்வில் திளைத்தேன்...
உடன் உனைக்காண
மனம் ஏங்கினேன்...
கண்ட நொடியில்
உனை அணைத்தேன்...
நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...
கண்ணா, நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...
15.

எண்ணங்கள் பல
கொண்டவளை உன்
காதல் வண்ணங்களால்
அழகாக்கினாய்..!
தூரம் போனவளை
துரத்தி தூவானமிட்டாய்
உன் வாய்மொழியிலே..!
விரும்ப எண்ணிடா மனதை
விரும்பியபடி யாசிக்க
கொடுத்து மகிழ்வித்தாய்..!
காணாத கண்களிலும்
கண்சிமிட்டா காதலை
சிதறவிட்டாய்..!
கேளாத நாதமாய்
லயித்து கேட்டிடும்
உன் குரலால்
என்னை மீட்டினாய் ..!
ஓயாத அன்பையும்
ஒய்யாரமாய் ரசித்து
புன்முறுவலிடுகிறாய்
உனக்குள் நீ..!
ஏற்றுக் கொள்ள இயலா
காரியங்களையும் என்
எட்டாத அறிவிற்குள்
அன்பால் புகுத்துகிறாய்..!
சேராத காதலையும்
சேர்த்தணைத்த
மோகத்தால்
திளைத்திடச் செய்கிறாய்..!
புரியாத பக்கங்களை
புரிந்துணர்ந்த
பக்குவமாய் மாற்றினாய்..!
யாரும் அறியாத
என் வரிகளையும்
உன் வர்ணனைகளால்
மெருகூட்டுகிறாய்..!
என் நேசம் அதிகமெனில்
உன் வாசம் பன்மடங்காய்
செலுத்துகிறாய்..
இன்னும் காலம் சில தான்
உந்தன் அன்பு எனக்கானவை
மட்டுமே எனினும் பதமான பாங்கை
எனக்குள் ஊட்டினாய்
நம் பிரிவெனும் கசப்பான மருந்தை
அமுதமாய் உன் அழகிய
நினைவைக் கொண்டு
என் மனதிற்கு நீயடா...!
What's Your Reaction?






