பட்டுப்புடவை எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு மாதிரியே இருக்கணுமா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

How to maintain Silk Sarees

Feb 7, 2025 - 11:46
 0  5
பட்டுப்புடவை எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு மாதிரியே இருக்கணுமா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

பட்டுப்புடவை எத்தனை வருஷம்

 ஆனாலும் புதுசு மாதிரியே

இருக்கணுமா? இந்த 5 டிப்ஸ்

ஃபாலோ பண்ணுங்க

 

பட்டுப்புடவை வாங்குவது பெரிய விஷயமல்ல. அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம். நிறைய பேருக்கு பட்டுப்புடவை கட்ட பிடித்திருந்தாலும் அதை பராமரிக்கத் தெரியாது என்பதாலேயே வாங்க மாட்டார்கள். சிலர் பராமரிக்க தெரியாமல் பாழாக்கி விடுவார்கள். இனி அந்த கவலையே வேண்டாம். இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. எவ்வளவு வருஷம் ஆனாலும் புதுசு மாதிரி அப்படியே இருக்கும்.

பட்டுப்புடவை எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு மாதிரியே இருக்கணுமா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

 

பெண்கள் எவ்வளவு மார்டனாக இருந்தாலும் புடவை பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். அதிலும் பாரம்பரியமான பட்டுப்புடவை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? அதே புடவையை சரியாக பராமரித்து வைத்துக் கொண்டால் எவ்வளவு பழைய பட்டுப்புடவையாக இருந்தாலும் பளிச்சென்று புதிது போலவே இருக்கும்.

 

​பர்ஃபியூம் அடிப்பது

பொதுவாக நம்மில் பலரும் பர்ஃபியூம் அடிக்கும் போது நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்பதற்காக டிரஸ்ஸின் மேலே நிறைய அடிப்போம்.

ஆனால் பட்டுப்புடவை கட்டும்போது பர்ஃபியூம் அடித்தால் புடவைக்கு மிக அருகில் ஸ்பிரே செய்யாமல் ஒரு அடி தள்ளி வைத்து அடியுங்கள். பர்ஃபியூமில் இருக்கும் ரசாயனம் சேலையில் படும்போது அது சேலையை டேமேஜ் செய்யும்.

​பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கவர்

கபோர்டில் நேரடியாக அப்படியே படடுப்புடவையை வைக்காமல் பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கவர்களில் பட்டுச்சேலைகளை அடுக்கி வைத்து பின் கபோர்டில் வைக்கிறார்கள்.

அந்த பிளாஸ்டிக் கவரில் நீண்ட நாட்கள் பட்டுச் சேலையை வைத்திருப்பது சேலைலை பாழ்படுத்தி விடும். அதனால் மல் மல் பேக் அல்லது காட்டன் பேகில் வைத்து பிறகு எந்த கவரில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

​நாப்தலின் உருண்டைகள்

துணிகள் வைக்கும் பீரோக்களில் நாம் பூச்சிகள் வராமல் இருக்கவும் வாசனையாக இருக்கவும் நாப்தலின் உருண்டைகளையோ அல்லது சின்ன பர்ஃபியூம் பேக்குகளையோ வைப்போம்.

ஆனால் பட்டுப்புடவை வைக்கும் கவரில் இந்த நாப்தலின் பால்ஸ் அல்லது பர்ஃபியூம் கவர்களை வைக்கக் கூடாது.

​இடமுள்ள வாட்ரூப்

பட்டுப்புடவைகளை மற்ற புடவைகளோ டிரஸ்களோ வைத்திருக்கும் இடத்தில் சேர்த்து வைக்காதீர்கள்.

பட்டுப்புடவையை தனி ரேக்கில் வையுங்கள். அந்த இடம் நெருக்கிக் கொண்டு இல்லாமல் கொஞ்சம் இடவசதியோடு இருக்கும்படி வையுங்கள்

​காற்றில் உஉலர விடுங்கள்

பட்டுப்புடவையை மிக அரிதாகவே உடுத்துவோம். ஒவ்வொரு புடவையும் பல ஆண்டுகள் வெளியே எடுக்காமல் கூட இருப்பீர்கள்.

நீங்கள் கட்டினாலும் சரி. கட்டாமலே இருந்தாலும் சரி. 3-6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பட்டுப்புடவைகளை வெளியே எடுத்துக் கொஞ்சம் காற்றோட்டமாக வைத்து லேசாக உலர விடுங்கள். நேரடியாக சூரிய வெளிச்சத்தின் கீழ் வைக்காதீர்கள்.

அதேபோல மீண்டும் எடுத்து உள்ளே வைக்கும்போது அதன் மடிப்புகளை மாற்றி வையுங்கள்.

 

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0