அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

Patti chicken Recipe in tamil

Feb 17, 2025 - 15:41
 0  3
அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு

 தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு

பாருங்க அட்டகாசமா இருக்கும்!! 

இப்பதான் நம்ம சிக்கன் எடுத்தா பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன் சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சாண்ட்விச், சிக்கன் பிரியாணி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்கிறோம் ஆனால் அந்த காலத்தில் எல்லாம் கோழிக்கறி இல்லனா ஆட்டுக்கறி ரெண்டுல எது எடுத்தாலும் ரொம்ப ரொம்ப சிம்பிளான மசாலாக்கள் வச்சு தான் செய்வாங்க அந்த ரெசிப்பிஸ் ரொம்ப ரொம்ப டேஸ்டாவே இருக்கும். சுட சுட சாதத்துல அந்த ரெசிபியை போட்டு பிசைஞ்சு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். நீங்களும் அதே மாதிரி ஒரு தடவை செஞ்சு பாக்கணும்னா இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க

பாட்டி கோழிக்கறி ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி நம்ம பாட்டி காலத்துல செஞ்ச ரெசிப்பி வெறும் மூணு மசாலா வச்சு ஒரு சூப்பரான கோழிக்கறி செய்யலாம். இது சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுறதுக்கும் ருசியா இருக்கும். ரசம் சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் லெமன் சாதம் போன்ற கலவை சாதம் கூட வைத்து சாப்பிடுவதற்கும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குறவங்க அடிமையாவாங்க. இந்த பாட்டி கோழிக்கறி ரெசிப்பிய ஒரு தடவை செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே பிடிக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க என்னதான் நிறைய மசாலாக்கள் சேர்த்து வெச்சாலும் இந்த மாதிரி சிம்பிளா வைக்கிற கோழிக்கறி ரொம்ப ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே இந்த ரெசிபி சைட் டிஷ் ஆக சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான பாட்டி கோழிக்கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பாட்டி கோழிக்கறி | Patti Kozhi Curry Recipe In Tamil இப்பதான் நம்ம சிக்கன் எடுத்தா பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன் சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சாண்ட்விச், சிக்கன் பிரியாணி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்கிறோம் ஆனால் அந்த காலத்தில் எல்லாம் கோழிக்கறி இல்லனா ஆட்டுக்கறி ரெண்டுல எது எடுத்தாலும் ரொம்ப ரொம்ப சிம்பிளான மசாலாக்கள் வச்சு தான் செய்வாங்க அந்த ரெசிப்பிஸ் ரொம்ப ரொம்ப டேஸ்டாவே இருக்கும். சுட சுட சாதத்துல அந்த ரெசிபியை போட்டு பிசைஞ்சு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். நீங்களும் அதே மாதிரி ஒரு தடவை செஞ்சு பாக்கணும்னா இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க. பாட்டி கோழிக்கறி ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி நம்ம பாட்டி காலத்துல செஞ்ச ரெசிப்பி வெறும் மூணு மசாலா வச்சு ஒரு சூப்பரான கோழிக்கறி செய்யலாம் இது சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுறதுக்கும் ருசியா இருக்கும். பவுள் 1 கடாய்

தேவையான பொருட்கள்

 1/2 கி சிக்கன் 100 கி சின்ன வெங்காயம் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் தனியா தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கி சிக்கன் வெந்த பிறகு இறக்கினால் சுவையான சிம்பிளான பாட்டி கோழிக்கறி தயார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0