நூலகம்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நூலகம் பற்றிய கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம் ஒவ்வொருவருக்கும் நூலகம் எவ்வளவு இன்றியமையாதது என்று தெரியுமா.? ஒவ்வொரு ஊருக்கும் நூலகம் அவசியம் இருக்க வேண்டும். ஒரு ஊருக்கு மிகவும் முக்கியமானது நூலகம்.
1. முன்னுரை:
"நூலகம் அறிவின் ஊற்று” வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்
என்கிறார் பேரறிஞர் அண்ணா ஊரில் உள்ள ஒரு நூலகத்தையாவது, நாம் பயன்படுத்த வேண்டாமா? நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்
2. நூலகத்தின் தேவை;
சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக உயர்த்துவது நூலகம் ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாடச் செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது.
3. வகைகள்;
மாவட்ட மைய நூலகம், மாவட்டக் கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், கல்லூரி நூலகம் பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம் மின் நூலகம் எனப் பல வகை நூலகங்கள் உள்ளன.
4. நூலகத்தில் உள்ளவை:
அறிவு பசிக்கு உணவு நூலகம்
தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், வரலாற்று நாளிதழ்கள், வார இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன.
5. படிக்கும் முறை:

நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூலகளைக் கிழிக்கவோ சேதப்படுத்தவதோ கூடாது. படித்து முடித்தவுடன் மீண்டும் உரிய அலமாரியில் நூலை வைக்க வேண்டும்.
6. முடிவுரை;
நம் அகம் நூலகம் நாளும் நூல் பல கற்று சிறந்த மேதையாக வரவும், நூலகம் துணை செய்கிறது. நூலகம் தேடிச் சென்று நூல்களைப் படிப்போம் உயர்வோம் I
What's Your Reaction?






