சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

May 2, 2025 - 19:31
 0  2
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது வரை 64 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக உச்சநீதிமன்றம் கொலிஜியம்,  கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம்  செய்ய பரிந்துரை செய்திருந்தது.

இதை சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதை ஏற்று குடியரசு தலைவர்  நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர், நீதிபதி கே.சுரேந்தர்  ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து  உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.