நெயில் ஆர்ட் என்னும் கலையை வீட்டிலேயே பராமரிப்பதற்கான சில முறைகள்!!!
Nail art tips in tamil

நெயில் ஆர்ட் என்னும் கலையை வீட்டிலேயே
பராமரிப்பதற்கான சில முறைகள்!!!
ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள். அப்படி பட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். இந்த கலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறை திருப்பி பார்த்தால் எகிப்தியர்களின் காலத்தில் என்று நம்பப்படுகிறது. எகிப்தியர்கள் பெர்ரி மற்றும் இதர செடியில் உள்ள நிரச்சத்தை எடுத்து தங்களின் நகங்களுக்கு வர்ணம் பூசி அழகு சேர்த்தனர். நகங்களுக்கு பல வகைகளில் அழகை சேர்க்கலாம். அது உங்கள் எண்ணம் மற்றும் ரசனையை பொறுத்து மாறுபடும். அது எளிய நுட்பமான முறையில் இருக்கலாம் அல்லது கருமையாக மூர்க்கமாகவும் இருக்கலாம். நக கலையை (Nail Art) எந்த வயதில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மேலும் நக கலை என்பது சுலபமான ஒன்று. அதனை வீட்டிலேயே செய்யலாம்.
அதில் பல வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு எளிய பிரெஞ்சு நக கலை, மணிக் கோர்வைத் தோற்ற நகங்கள் அல்லது செய்தித்தாள் அச்சு வகை. உங்களுக்கு தேவையானதெல்லாம் செல்லோ டேப், தெளிமையான நக எனாமல், நக பூச்சு (நெயில் பாலிஷ்) போன்ற சில பொருட்களே. நக கலையை கையாளுவதற்கு முன்பாக பல வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். சரியாக பராமரித்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் அழகான ஆரோக்கியமான நகங்களை பெறலாம். வீட்டிலேயே நக கலையில் ஈடுபடும் போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவை சில உள்ளது. அது என்னெவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க!
1. வீட்டிலேயே நக கலையை மேற்கொள்ள முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் நகத்தின் நிலையை தான். ஒவ்வொரு தருணத்திலும் நக கலையின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதன் விளைவுகளையும் ஒவ்வொரு தருணத்திலும் குறித்து கொண்டே வாருங்கள். நகங்களின் நிலையை அறிந்து கொள்ள முதலில் உங்கள் நகங்களை வழுவழுப்பாக மாற்றி அதன் மீது புறத்தோலை மென்மையாக்கும் சொல்யூஷனை தடவுங்கள். பின் உங்கள் கைகளை சோப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இது நக கலையை அதிக நாட்களுக்கு நீடிக்க செய்யும்.
2. இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டியது நகங்களின் ஒரு பேஸ் கோட் அடிப்பது. நக கலையை அதிக நாட்களுக்கு நீடிக்க செய்வதால் பேஸ் கோட் மிகவும் முக்கியமானதாகும். மேலும் கறைகள் ஏதும் ஏற்படாமல் நகங்களை அது பாதுகாக்கும். பேஸ் கோட்டை ஒழுங்காக செய்யாவிட்டால் உங்கள் நகங்களில் மஞ்சள் கறைகளை ஏற்படுத்தி விடும். அதனால் சரியான பேஸ் கோட்டை பயன்படுத்த தவறாதீர்கள்.
3. மூன்றாவதாக உங்களுக்கு பிடித்த நிறத்தில் நக பூச்சை தேர்ந்தெடுங்கள். நிறத்தை தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனம் தேவை. உங்கள் உடல் நிறத்திற்கு ஏற்றார் போல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுங்கள். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தால் நல்ல தோற்றத்தை அளிக்கும். இவ்வகை நிறங்களை நீங்கள் அலுவலகத்துக்கு செல்லும் போதும் சரி, இரவு பார்டிக்கு செல்லும் போதும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. தேர்ந்தெடுத்த நக பூச்சினை இரண்டு கோட்டிங் போட்டு கொள்ளுங்கள். போடும் போது அதா ப்ரஷ் உங்கள் நக புறத்தோல்களுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை ப்ரஷ், புரத்தோல்களை தொட்டால் கூட, குளிக்கும் போது அது போய் விடும். அதன் பின் தடவிய பாலிஷை சிறிசு நேரம் காய விடுங்கள். இதனால் உங்களின் நகத்தில் செய்யப்பட கலை அதிக நாட்களுக்கு நீடிக்கும்.
5. அதன் பின் உங்களின் பளபளப்பு பாலிஷை எடுங்கள். முடிந்த வரை பிரஷில் உள்ள பாலிஷை எடுக்க விடுங்கள். வெறுமனே அந்த பளபளப்பு மட்டுமே அதில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின் அதை வைத்து உங்கள் நகங்களில் சின்ன சின்ன கலைகளை வரைந்து கொள்ளுங்கள்.
6. பிரஷை மீண்டும் ஒரு முறை ஈரமாக்கி, உங்கள் நகங்களில் தேவைக்கு அதிகமாக ஒட்டியிருக்கும் நக பாலிஷை நீக்குங்கள். கடைசியாக பிரஷில் பாலிஷை தடவி நக நுனியில் பிரெஞ்சு டிப் முறைப்படி தடவுங்கள். கடைச்யாக நீங்கள் செய்ய வேண்டியது கூடுதலாக ஒரு கோட்டிங் கொடுப்பது மட்டும் தான். கடைசியாக கொடுக்கும் கோட்டிங் உங்களின் நக கலையை நீண்ட மாதங்களுக்கு நீடிக்க செய்யும்.
What's Your Reaction?






