Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மியான்மாரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

Apr 4, 2025 - 21:47
Apr 4, 2025 - 21:45
 0  1
Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

நாட்டின் ராணுவ அரசு ஆறு பகுதிகளில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்புப் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.

1988ல் ஏற்பட்ட நிலநடுக்கம்

இதற்கு முன்பு இந்த அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1988 ஆம் ஆண்டு மியான்மாரில் ஏற்பட்டுள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்திய எல்லையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதில் 730 மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அதன் பின்னர் 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி 9.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கோகோ தீவு வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?

பூமியின் மேற்பரப்பு பல பெரிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் நகரும்போது ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, பாறைகள் உடைந்து ஆற்றல் வெளியிடுகிறது.

ஆற்றல் வெளியீடு நில அதிர்வு அலைகளை உருவாக்குகின்றன. அவை பூமியின் மேற்பரப்பு வழியாகப் பரவி நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நிலநடுக்கங்கள் எரிமலை சரிவு மற்றும் வெடிப்பினாலும் ஏற்படுகின்றன. மியான்மார், சீனா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற சில பகுதிகள் புவியின் உட்புறச் சூழலின் பலவீனத்தன்மை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் எப்படி மீண்டனர்

நிலநடுக்கத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. போக்குவரத்துச் சேவைகள், நீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இடையூறு ஏற்பட்டன.

முக்கிய சமூக சேவைகளின் இழப்புகள் ஏற்பட்டன. அதன் பின்னர் மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். அரசின் உதவியும், அதிக காப்பீட்டு பிரீமியங்களும் இதற்கு உதவியாக இருந்தன.

பாதிக்கப்பட்ட சமூகத்தின் சமூக பொருளாதார நிலையும் அவர்கள் படிப்படியாக மீட்டெடுத்துக் கொண்டு வந்தனர். இயற்கை பேரிடர் இயற்கையான ஒன்று என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.