அசோக் செல்வனின் புதிய படம் தொடக்கம்.. ஹீரோயின் யார் தெரியுமா? - ASHOK SELVAN 23RD FILM
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சென்னை: இளம் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் நடிப்பில் தயாராகும் '#AS23 ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று (பிப்ரவரி 09) சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும், பெயரிடப்படாத திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இது அசோக் செல்வனின் 23-வது படமாகும். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை '#AS23 ' என்று அழைத்து வருகிறார்கள்.
முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை, ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம்.
இந்த திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் வரவேற்பைப் பெற்ற பட இயக்குநரின் கதை என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ படத்திலும் அசோக் செல்வன் தான் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






