பச்சை முட்டையில் தயாரிக்கும் மயோனைஸிற்கு தமிழகத்தில் ஓராண்டு தடை

தமிழகத்தில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு மாநில உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்க கூடாது, பதப்படுத்தக் கூடாது, சேமித்து வைக்க கூடாது, விற்கக் கூடாது, உணவு பொருட்களுடன் விற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் இந்த தடை அமலில் இருக்கும் என உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

May 3, 2025 - 16:06
 0  2
பச்சை முட்டையில் தயாரிக்கும் மயோனைஸிற்கு தமிழகத்தில் ஓராண்டு தடை

ஷவர்மா, சமோசா, மோமோஸ், சிக்கன் வறுவல் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட மயோனைஸ் வழங்கப்படுகிறது. வெள்ளை நிற பசை போல் காட்சியளிக்கும் மயோனைஸ் பச்சை முட்டை, காய்கறி எண்ணெய், வினீகர் மற்றும் சில பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதன் காராணமாக மயோனைஸிற்கு தமிழகத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மயோனைஸ் தடைக்கு அதன் தயாரிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல ஏற்கெனவே ஐதராபாத்தில் மயோனைஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்ததன் காரணமாக மயோனைஸிற்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மயோனைஸ் தடை

மயோனைஸ் பச்சை முட்டை, காய்கறி எண்ணெய், வினீகர் மற்றும் இதர பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஷவர்மா போன்ற உணவுகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறுகின்றனர். பச்சை முட்டை கொண்டு மயோனைஸ் தயாரிக்கப்படுவதால் அது எளிதில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. ஏனெனில் மயோனைஸில் சால்மோனெல்லா உள்ளிட்ட சில பாக்டீரியாக்கள் வளர்கின்றன. மயோனைஸின் முறையற்ற தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் முறை காரணமாக அதில் வளரும் பாக்டீரியாக்கள், கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கின்றன. இதன் எதிரொலியாக மயோனைஸிற்கு தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது.

மயோனைஸ் உயிருக்கு ஆபத்தா ?

பச்சை முட்டை கொண்டு தயாரிக்கும் மயோனைஸ் முறையாக பதப்படுத்துவது அவசியம். இதை விற்பனை செய்யும் பலரும் தவறவிடுகின்றனர். ஐதராபாத்தில் மயோனைஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். மனித உயிருக்கும், வாடிக்கையாளரின் நலன் கருதியும் மயோனைஸ் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. மயோனைஸ் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் போதிய அறிவியல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. எனவே ஆபத்தை கருதி மயோனைஸ் தயாரித்தல், இறக்குமதி, விற்பனை, பதப்படுத்துதலுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தில் மயோனைஸ் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மயோனைஸ் மட்டுமல்ல முறையாக பதப்படுத்தாமல் உணவுப் பொருட்களை விற்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.