வக்பு வாரிய மசோதா தொடர்பான அறிக்கை தாக்கல் விவகாரம்
வக்ஃப் திருத்த மசோதா - 2025: அனைத்துத் தரப்பினரின் ஈடுபாட்டுடன் சீர்திருத்தம் இந்தியாவில், பாதுகாப்புத் துறை, இந்திய ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களைக் கொண்டிருப்பது வக்பு வாரியம்தான் என சொல்லப்படுகிறது.
1. வக்பு வாரியம்
வக்ஃப் சட்டம் என்பது, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இஸ்லாமியர்கள் பக்தி, தர்மம் அல்லது மத நோக்கங்களுக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கும்போது, அந்த சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்களாக மாறுகின்றன. இந்த சொத்துக்கள் இஸ்லாமிய சமூகத்தின் நன்மையைச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. வக்ஃப் சட்டத்தின் மூலம், இந்த சொத்துக்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும், யார் நிர்வகிக்கலாம், வருமானம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் வரையறுக்கப்படுகின்றன.
2. வக்ஃப் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

வக்ஃப் சொத்துக்கள்:
பக்தி, தர்மம், மத நோக்கம் போன்றவற்றுக்காக ஒரு சொத்தை நிரந்தரமாக அர்ப்பணிப்பது வக்ஃப் ஆகும்.
வக்ஃப் வாரியங்கள்:
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் போன்ற அமைப்புகள், சொத்துக்களைப் பாதுகாப்பது, வருமானத்தை நிர்வகிப்பது போன்ற பணிகளைச் செய்கின்றன.
நிர்வாகம்:
வக்ஃப் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அதிகாரங்கள் வக்ஃப் வாரியங்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளன. அறக்கட்டளை நிர்வாகிகளின் அதிகாரங்களும் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளன.
வருமானம்:
வக்ஃப் சொத்துக்களின் வருமானம், வக்ஃப் சொத்துக்களின் நோக்கம் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் நன்மையைச் செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
வரி:
வக்ஃப் சொத்துக்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அதிகாரம்:
வக்பு சட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது
3. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, ஏப்ரல் 8 செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. வக்ஃப் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் குறித்து, சிறுபான்மை விவகார அமைச்சக அறிவிப்பில், “வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 (2025 இன் 14) பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு இதன் மூலம் ஏப்ரல் 8, 2025 ஐ இந்தச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாக நியமிக்கிறது.”
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவக்ஃப் சொத்துக்க ளை மேலாண்மை செய்வதிலும் நிர்வகிப்பதிலும் உள்ள சிக்கல்களை சரிசெய்ய வக்ஃப் திருத்த மசோதா - 2025 அறிமுகப்படுத்தப்பட்டது. விதிகளைத் தெளிவுபடுத்துவது, முடிவெடுப்பதில் அதிகமான நபர்களைச் சேர்ப்பது, வக்ஃப் சொத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
2024 ஆகஸ்ட் 8 அன்று, மக்களவையில் இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா - 2024, முசல்மான் வக்ஃப் (ரத்து )மசோதா - 2024 ஆகும். இந்த மசோதாக்கள் வக்ஃப் வாரியங்கள் நியாயமாகச் செயல்படுவதையும், வக்ஃப் சொத்துக்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டவையாகும்.
முசல்மான் வக்ஃப் ரத்து மசோதாவானது, பிரிட்டிஷ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டு இப்போது காலாவதியான முசல்மான் வக்ஃப் சட்டம் - 1923-ஐ ரத்து செய்யக் கொண்டுவரப்பட்டது. இந்தப் பழைய சட்டத்தை நீக்குவது என்பது வக்ஃப் சட்டம், 1995-ன் கீழ் மிகவும் நிலையான, வெளிப்படையான, பொறுப்புக்கூறக்கூடிய அமைப்பை உருவாக்க உதவும். அத்துடன் பழைய சட்டத்தால் ஏற்படும் குழப்பங்களையும் நீக்கும்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வக்ஃப் சட்டம் -1995-ஐ புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வக்ஃப் வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், சட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தல் போன்ற மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்து நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரித்தல் ஆகியன முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.
What's Your Reaction?






