மரம் பற்றி கவிதை...

தமிழ் கவிதைகள்

Feb 3, 2025 - 15:08
Feb 3, 2025 - 22:18
 0  7
மரம் பற்றி கவிதை...
மரங்கள்
மானுடத்தின் இன்னொரு
சுவாசப் பைகள் என்பதை
நாம் மறந்து விட்டோம்..!
சோறு இல்லாமல்
ஐந்து நாட்கள் இருக்கலாம் ...
தண்ணீர் இல்லாமல்
ஒரு நாட்கள் இருக்கலாம் ....
காற்று இல்லாமல்
ஐந்து நிமிடம்
இருந்து பார்....
புரிந்துக் கொள்வாய்
மரத்தின் அருமையை...
தெரிந்துக் கொள்வாய்
மரத்தின் பெருமையை.....
தொப்புள் கொடியை
அறிந்தெறிந்து விட்டு
கர்ப்பத்தில் இருக்கும் கரு
வளர
ஆசைப்படுவது போல் உள்ளது.... மரத்தை வெட்டி
எறிந்து விட்டு
மனிதர்கள் வாழ
ஆசைப்படுவது.....!
இன்று
மரங்கள்
வீடுதோறும் இருக்கின்றன மரப்பொருட்களாக..!
ஒரு நாள் கூத்துக்கு
மீசையை எடுப்பதுபோல்
இன்று
மரத்தை எடுக்கின்றனர்....!
மரம் நடும் விழா
மந்திரி வருகைக்கு
இடைஞ்சல்
மரம் வெட்டப்படுகிறது..
இதுதான்
நாம் மரத்தின் மீது
வைத்திருக்கும் அக்கறை....
எப்போது பார்த்தாலும்
வைத்த மரத்தின்
எண்ணிக்கையையே !
சொல்லிக்
கொண்டிருக்கிறோம்.....
எப்போது
சொல்லப் போகிறோம்
வளர்ந்த மரத்தின்
எண்ணிக்கையை.....!!!
"நீர் இன்றி அமையாது
உலகு" என்று வள்ளுவன் சொன்னான்...ஆனால்
அந்த நீரைத் தரும் மழையே!
மரம் இன்றி
அமையாது என்பதை
கத்தி கத்தி சொன்னாலும்
யாரும்
காதில் வாங்குவதே இல்லை....!
மரங்கள்
பறவைகளுக்கு
வாடகை வாங்காமல்
வசிக்க இடம் அளிக்கும் பெருந்தகையாளர்....
சிபி மன்னன்
புறாவின் உயிரைக் காக்க
உடல் தசையை
அரிந்து தந்தது போல் ....
இந்த மரங்கள்
உலக மக்களின்
உயிரைக் காக்க
தன்னையே அல்லவா!
மருந்து பொருளாக
அறிந்து தருகின்றன.....
காய்கள் பழங்களை
எவ்வளவு கேட்டாலும்
எடை போட்டு
கொடுக்காமல்
அள்ளி அள்ளித் தருவதால்...
மரங்கள் என்ன
கர்ணனின்
மறுபிறவியோ....?
எந்த கைமாறும் கருதாமல் சுவாசக்காற்றை
அழைக்கும்
இன்னொரு பேகன்!
பாரி என்ன?
முல்லைக்கொடிக்கு
தேரைத்தானே!
கொடுத்தான்....
இந்த மரங்கள்
மனிதர்களுக்கு
தன்னையே அல்லவா கொடுத்திருக்கிறது..!
இனி
வள்ளகள் எத்தனை என்று
கேட்டால்
எட்டு என்று சொல்லுங்கள்
மரத்தின் பெரையும் சேர்த்து....
மரமின்றி போனால்
நாடு நலமின்றி போகும்
நாடு நலமின்றி போனால்
மக்கள் வளமின்றி போவார்கள்
மக்கள் வளமின்றி போனால் வாழ்க்கை சுகமின்றி போகும்
வாழ்க்கை சுகமின்றி போனால் மானுடமே பயனற்றுப் போகும்....
மரத்தை வெட்டுவது
குற்றம் என்று
சட்டம் இயற்றுவோம் !
மரத்தை தொட்டு வணங்கி தெய்வமென்று போற்றுவோம் !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow