உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது

Jan 17, 2025 - 13:53
Jan 17, 2025 - 13:53
 0  23
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. புதுடெல்லி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது
முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்ட  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.


இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினார். மேலும் மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி சிறப்பித்தார்



What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0