அறிந்துகொள்வோம்: மீன்கள் தூங்குமா? தூங்காதா?
சிலவகை சுறா மீன்களுக்கு மட்டுமே கண் இமைகள் உள்ளன. மற்ற மீன் வகைகளுக்கு கண் இமைகள் இல்லாததால் அவற்றால் கண்களை மூட முடியாது. இதனால், அவை கண்களைத் திறந்தபடி துாங்கும்.

ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை. நீரில் மிதந்தபடி, கற்களுக்குள் ஒளிந்தபடி விதவிதமான நிலைகளில் அவை ஓய்வு கொள்கின்றன.
சில மீன்கள் இரவிலும் சில மீன்கள் பகலிலும் தூங்கும்.
மீன்களில் ஏறக்குறைய 22,000 வகைகள் உள்ளன.
ஒவ்வொரு மீன் வகையும் நிறம், வடிவம், எடை போன்றவற்றால் வேறுபட்டுக் காணப்படும். மீன்களால் நீரில் உண்டாகும் சிறு அதிர்வுகளையும் துல்லியமாக உணரமுடியும்.
மீன்களுக்கு நுரையீரல் இல்லாததால், அவை தன் வாயால் நீரை உறிஞ்சி அதிலுள்ள உயிர்வாயுவை (ஆக்சிஜன்) எடுத்துக்கொண்டு செவுள்கள் வழியே கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும்.
கோபி என்ற மீன் மிகவும் சிறியதாக இருக்கும். ‘நுரையீரல் மீன்கள்’ நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன. ஒளியை உமிழும் மீன்கள் ஆழ்கடலில் வாழ்கின்றன.
பப்ஃபர் மீன் தட்டையாக இருக்கும். ஆனால், எதிரிகளைக் கண்டால் தண்ணீரைக் குடித்து உருண்டையாக மாறிவிடும். அதனைப் பார்த்து எதிரிகள் பயந்து ஓடிவிடும்.
பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரம் வரை தாவிச்செல்லும். மிகவும் அதி வேகத்தில் செல்லக்கூடியது செயில் மீன். சூரிய மீன் வகை, கோடிக்கணக்கான முட்டைகளை இடும்.
What's Your Reaction?






