நீயே என் முதல் காதல்.......

தமிழ் காதல் கவிதைகள்

Jan 28, 2025 - 15:06
Jan 28, 2025 - 15:06
 0  12
நீயே என் முதல் காதல்.......

அனல் காற்று வீசும் வேளையிலே

தென்றல் வந்து தவழுவது போல் ஓர் உணர்வு

இதயம் சற்று வேகமாக துடிக்கிறது

மனம் ஏனோ திடீரென படபடக்கிறது

காதருகே ஓர் குரல் கேட்க

இனம்புரியா நடுக்கம் உள்ளே செல்ல

அதுவரை சீராய் இருந்த

என் செயல்பாட்டில் திடீர் மாற்றம்

கண்கள் வேகமாக தேடுகிறது

கண்கள் உன்னை படம்பிடித்ததும்

இதழின் ஓரம் ஓர் காதல் சிரிப்பும் தோன்ற

எப்போதும் முயல் போல் தாவும் கால்கள்

ஆமை போல் நகர்கிறது

ஊருக்கு அடங்காத வாய் பேச்சு

உன்னை கண்டதும் மௌனமாய் மாறுகிறது

மௌனத்தை வென்று எப்படியாவது

உன்னிடம் பேசிவிட வேண்டும்

என்ற ஏக்கத்தில் நடக்கிறேன்

எப்படி ஆரம்பிப்பது என்று

எனக்கும் என் மனதிற்கும் இடையே

போர் நிலவ

முந்தி கொண்டது மௌனம்

பின்னே சென்றது கால்கள்

என்னை கடந்து செல்லும் உன்னை பார்த்து

உன்னை பிடித்திருக்கிறது

என்று சொல்லவும் முடியாமல்

என் காதல் உனக்கு புரியவில்லையா

என்று கேட்கவும் முடியாமல்

தினமும் தவிக்கிறது என் மனம்

ஏனோ நீயே

என் முதல் காதலாக

இருப்பதால்...........

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.