இளநீர் பாயாசம் எனும் அமிர்தம்! மெய் மறக்கும் சுவை... எளிதான ரெசிபி

ஒரிஜினலான இளநீர் பாயாசம் ருசிக்க வேண்டுமா ? இந்த ரெசிபியை பின்பற்றி செஞ்சு பாருங்க... நாக்கில் சுவை மொட்டுகள் நடனமாடும்.

Feb 10, 2025 - 22:50
 0  5
இளநீர் பாயாசம் எனும் அமிர்தம்! மெய் மறக்கும் சுவை... எளிதான ரெசிபி

பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சுபநிகழ்வுகளில் சொல்வதற்கான காரணம் சாப்பாடு, சாம்பார், குழம்பு, ரசம், மோர், இனிப்புகள், கூட்டு, அப்பளம், பாயாசம் என எதையுமே தவறவிடக் கூடாது என்பதற்காக தான். தாமதமாக சென்றால் பந்தியில் ஏதாவது ஒன்று கிடைக்காமல் போய்விடும். வாழை இலையில் கேசரி, குலாப் ஜாமுன் என இனிப்புடன் ஆரம்பித்து இனிப்பான பாயாசத்துடனேயே நிறைவு செய்வார்கள். பாயாசங்களில் பல விதமான பாயாசங்கள் உள்ளன. இதில் சுவை மொட்டுகளை நடனமாட வைக்க கூடியது இளநீர் பாயாசம். சைவம் அல்லது அசைவ விருந்தில் இளநீர் பாயாசம் பரிமாறுவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதை உங்கள் அன்புக்குரியவர்களிடம் செய்து கொடுத்து விரும்பிதை கேட்டுப் பெறவும். இந்த ரெசிபி 1996ல் தமிழகத்தில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது.

இளநீர் பாயாசம் செய்யத் தேவையானவை;
  • இளநீர் வழுக்கை
  • தேங்காய் பால்
  • பசும் பால்
  • சுண்டிய பால்
  • ஏலக்காய் பொடி
  • ஐஸ்கட்டி
  • பாதாம் பருப்பு

இளநீர் பாயாசம் செய்முறை

  • கடாயில் அரை லிட்டர் பசும் பால் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ரப்டி ஆக மாற்றவும். ரப்டி என்பது பால்கோவாவின் முந்தைய நிலை ஆகும்.
  • அரை லிட்டர் பாலை ரப்டி ஆக மாற்றுவதற்கு உங்களுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் எடுக்கும்.
  • இதனிடையே நான்கு இளநீரின் வழுக்கையை எடுத்து அதில் நார் நீக்கவும்
  • பஞ்சு போல் இருக்கும் இளநீர் வழுக்கையை கத்தியை கொண்டு துண்டு துண்டாக வெட்டவும்
  • அரை லிட்டர் பால் 100 மில்லி லிட்டராக குறையும் போது 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  • இதனுடன் சுண்டிய பால் பத்து ஸ்பூன் சேர்க்கவும். அடுத்ததாக ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி போட்டு 150 மில்லி லிட்டர் தேங்காய் பால் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • இதை இளநீர் வழுக்கையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டி ஊற்றவும். அவ்வளவு தான் இளநீர் பாயாசம் ரெடி.
  • இதனுடன் நான்கு ஐந்து பாதாமை பொடிதாக நறுக்கி மேலே தூவி விடுங்கள்.
  • இதைச் சுற்றி ஐஸ் கட்டிகள் போட்டு ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும். இரண்டு மணி நேரத்திற்கு இதன் சுவை அமிர்தம் போல இருக்கும். நான்கு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ள பாலின் தன்மை மாறிவிடும்.
  • நாம் பயன்படுத்திய அளவுகளை வைத்து நான்கு பேருக்கு இந்த இளநீர் பாயாசத்தைக் கொடுக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow