அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்

பல வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கூறிய பரம இரகசியம் அதிகாலையில் எழ வேண்டும் என்பதே ஆகும். ஆனால் நம்மில் பலரும் வேலைப்பளு, சோம்பல், நீண்ட நேர தொலைபேசி பாவனை போன்ற காரணங்களினால் அதிகாலையில் எழுவதில்லை. அதிகாலை எனப்படுவது காலை 4 மணிமுதல் 6 மணி வரையான காலம் ஆகும். இன்றைய பதிவில் அதிகாலையில் எழுவதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போம்.

Mar 19, 2025 - 11:06
 0  2
அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்

தினமும் சரியான நேரத்தில் தூங்குவதை பழக்கமாகக் கடைப்பிடித்தல்

தினமும் சரியான நேரத்திற்கு நித்திரைக்கு செல்ல வேண்டும். அதாவது தினமும் பத்து மணி அல்லது அதற்கு முன்னதாக தூங்க செல்லுதல் சிறந்த வழியாகும்.

தொலைபேசி பாவனை

இன்று பலரும் செய்யும் மிகப்பெரும் தவறு தொலைபேசி பாவனை. பலர் தூங்க செல்வதற்கு முன்னராக தொலைபேசியுடன் நீண்ட நேரத்தை செலவிட்ட பின்னரே தூக்கத்திற்கு செல்கின்றனர்.

இவ்வாறு செய்வதனால் நித்திரைக்கு தேவையான ஹோர்மோன் சுரக்கும் அளவு குறையும் அல்லது தடைப்படும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தொலைபேசி பாவனையை நிறுத்துவது கட்டாயமாகும்.

நேர ஒழுங்கு

தினமும் தூக்கத்திற்கு செல்வதற்கும் அதிகாலையில் எழுவதற்கும் எப்பொழுதும் ஒரே நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு ஒரே நேரத்தை கடைப்பிடித்து வர நாளடைவில் அது பழக்கத்திற்கு வரும்.

21 நாள் தொடருதல்

தினமும் அதிகாலையில் தினமும் எழும்புவதற்கு ஒரு சரியான நேரத்தை தீர்மானித்து விட்டு அதனை 21 நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் பின்னர் அது பின்னாளில் பழக்கமாக மாறி விடும்.

உணவு

இரவில் நன்றாக தூங்குவதற்கு கடுமையான உணவுகளை உண்ணாது மென்மையான குறைந்தளவு உணவு உண்பது சிறந்தது. மிகவும் குறைந்தளவு உணவு எடுத்தால் தூக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு நடு இரவில் பசி எடுக்கும். எனவே மிதமான அளவு உணவு எடுத்தல் சிறந்தது.

தண்ணீர்

இரவில் குழப்பமில்லாமல் தூங்கினால் மட்டுமே அதிகாலையில் எழ முடியும். இரவில் தூங்கும் முன்பு அதிகளவு தண்ணீர் அருந்த கூடாது. இது தூக்கத்தில் சிறுநீர் கழிக்க வழியை ஏற்படுத்தும்.

அலாரம்

பலர் செய்யும் தவறு என்னவெனில் அதிகாலையில் எழுவதற்கு அலாரம் அருகில் வைத்து விட்டு அதிகாலை எழுந்து அருகில் இருக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் திரும்ப தூங்குவதாகும்.

எனவே எப்பொழுதும் நம்முடைய படுக்கைக்கு சிறிது தூரம் தொலைவில் அலாரத்தை வைத்தல் நன்று. ஏனெனில் அம்பொழுது தான் அலாரம் அடிக்கும் போது அதை நிறுத்துவதற்கு எழும்பிச் செல்லும் போதே நம்முடைய தூக்கம்  கலைந்து விடும்.

குளித்தல்

தூங்குவதற்கு முன்பு குளித்து விட்டு தூங்கினால் நமக்கு ஆழ்ந்த நித்திரை ஏற்படும்.  குறிப்பாக இரவில் வேளைக்கு குளித்துவிட்டு தூங்கினால் அதிகாலையில் எழும்ப முடியும்.

தொலைக்காட்சி

நிறைய பேர் தொலைக்காட்சி நீண்ட நேரம் பார்த்துவிட்டு தாமதமாக நித்திரைக்கு செல்கின்றனர். இது ஆழ்ந்த தூக்கத்தை நமக்கு தராது இயலுமானவரை தூங்க 1 மணித்தியாலம் முன்பு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தம்

எப்பொழுதும் தூங்கச் செல்லும் போது மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே ஆழ்ந்த தூக்கம் ஏற்பட்டு அதிகாலையில் எழும்பக் கூடியதாக இருக்கும்.

எனவே தூங்கச் செல்லும் போது உள்ள இடங்களில் வெளியில் சிறிது நேரம் நடந்து விட்டு தூங்கச் செல்லுதல் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகுப்பதோடு மனம் அமைதியுடன் தூங்க செல்வதால் இது அதிகாலையில் எழுவதற்கு வழி வகுக்கும்.

மேலே குறிப்பிட்ட வழி முறைகளைப் பின்பற்றி அதிகாலையில் எழுவதைப் பழக்கமாக்கி நாமும் பல சாதனைகளைப் புரிந்து சாதனையாளர்களாக வரலாறு படைப்போம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.