வங்கிகள் அழைத்து அழைத்துக் கிரெடிட் கார்டு வழங்க காரணம் என்ன? எலி வலையில் சிக்குகிறோமா?
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு பணம் செலுத்துவதற்கு 45 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் பணம் செலுத்தி விட்டால் கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் கிடைக்கும். இன்றெல்லாம் வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு வங்கிகள் அழைப்பு விடுத்து கிரெடிட் கார்டு வேண்டுமா? என கேட்கின்றனர்.

இதனால் வங்கிகளுக்கு என்ன நன்மை என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நம் நாட்டில் 11 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக வங்கிகளுக்கு ஒரு லாபகரமான வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் பல வழிகளில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுகின்றன. உதாரணமாக நீங்கள் சரியாக பில்லை செலுத்தவில்லை என்றால்.. அதற்கு வட்டி விகிதங்கள் பொருந்தும். இது தவிர வருடாந்திர கட்டணங்கள், வணிகர்களிடம் வசூலிக்கப்படும் பரிமாற்ற கட்டணங்கள், அபராதக் கட்டணங்கள், மறைமுக கட்டணங்கள் ஆகியவையும் அடங்கும். பரிமாற்றக் கட்டணங்கள் என்பது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வணிகர்கள் வங்கிக்க செலுத்தும் தொகை. இந்தியாவில் உள்ள வங்கிகள் கிரெடிட் கார்டுகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்யப்பட்ட தொகை 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.1,84,000 கோடியை எட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு. கிரெடிட் கார்டுகள் பயனர்களுக்கு ரிவார்டுகள், கேஷ் பேக்குகள். டிராவல் செய்வதற்கான தள்ளுபடிகள் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றால் நிதி இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கிரெடிட் கார்டு பெறுபவர்கள் எதை கவனிக்க வேண்டும்?: என்னதான் கிரெடிட் கார்டுகளை வங்கிகள் அழைத்து அழைத்து வழங்கினாலும் உண்மையில் உங்களுக்கு கிரெடிட் கார்டு தேவையா? அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற விவரங்களை தெரிந்து கொண்டுதான் கிரெடிட் கார்டு பெற வேண்டும். முன்பு சொன்னது போல் கிரெடிட் கார்டுகளுக்கு பிற கடன்களை விட வட்டி அதிகம். அதோடு சில மறைமுக கட்டணங்களும் அடங்கும். ஆனால் கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அதற்கு ரிவார்டுகள் கேஷ்பேக்குகள் என பல நன்மைகள் கிடைக்கும்.
HDFC பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பெரிய வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. எனவே கிரெடிட் கார்ட் பெரும் வாடிக்கையாளர்கள் அதன் நன்மைகள் என்ன? அபாயங்கள் என்ன? என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பில் செலுத்துவது, தேவையற்ற செலவுகளை குறைப்பது, நிதி ஆலோசகரின் உதவியுடன் கிரெடிட் கார்டு பெறுவது ஆகியவை பயனர்களுக்கு நன்மை பயக்கும்
What's Your Reaction?






