செங்கல் அல்லது ஹாலோ பிளாக்.. எதை பயன்படுத்தி கட்டினால் வீடு உறுதியாக இருக்கும்?

எல்லா இடங்களிலும் செங்கற்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. மலைகளில் செங்கற்களை ஏற்றுமதி செய்வதும் இறக்குமதி செய்வதும் மிகவும் கடினமாகி வருகிறது

Jan 29, 2025 - 20:22
Jan 29, 2025 - 20:22
 0  2
செங்கல் அல்லது ஹாலோ பிளாக்.. எதை பயன்படுத்தி கட்டினால் வீடு உறுதியாக இருக்கும்?
வீடுகளை கட்டுவதற்கு முன்பு செங்கற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் எனப்படும் கான்கிரீட் கற்களும் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

வீடுகள் மட்டுமின்றி, இந்த ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவையும் கட்டப்படுகின்றன. செங்கல் அல்லது கான்கிரீட் கற்கள் இரண்டில் எதை பயன்படுத்தி வீட்டை கட்டினால் வீடு உறுதியாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

இது குறித்து இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களில் ஒருவரான அதுல் குப்தா தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: “ஹாலோ பிளாக் கற்கள் 4 முதல் 8 இன்ச் வரை வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. பல நூற்றாண்டு காலமாக செங்கற்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் பிளாக் அதாவது ஹாலோ பிளாக் மற்றும் செங்கலுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கின்றன.

இதனை ஒப்பிட்டு பார்த்தால் செங்கல் தான் சிறந்ததாக கருதப்படும். இருப்பினும், எல்லா இடங்களிலும் செங்கற்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. மலைகளில் செங்கற்களை ஏற்றுமதி செய்வதும் இறக்குமதி செய்வதும் மிகவும் கடினமாகி வருகிறது. அதனால், ஹாலோ பிளாக் கற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இனிவரும் காலங்களில் ஹாலோ பிளாக் வீடுகள் அதிகம் கட்டப்படும்.

ஆனால், உறுதி என்று பார்க்கும் போது செங்கல் மட்டுமே வலுவானதாக இருக்கும். ஏறக்குறைய இந்த 2 கற்களின் விலையும் ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால், ஹாலோ பிளாக் வைத்து வேலை பார்க்கும் போது தொழிலாளர்களுக்கான சம்பள செலவு குறையும். ஏனென்றால், இந்த ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்தி வீடு கட்ட குறைந்த தொழிலாளர்கள் போதுமானது.

இதேபோன்று தயாரிப்பு நேரமும் குறைவானதாக இருக்கும். செங்கலுக்கு அப்படியே மாற்றமாக அமையும். கட்டிடத்தை கட்டி முடித்த பின்பு சுவரில் ஒரு குழாயை ஏற்படுத்த வேண்டும் என்றால் அல்லது ஆணி அடிக்க வேண்டுமென்றால் ஹாலோ பிளாக் கற்களில் மிக எளிதில் செய்து விட முடியாது.

ஆனால், செங்கல் வீட்டில் குழாய் பதிப்பதையோ ஆணி அடிப்பதையோ எளிதாக செய்துவிடலாம். இதனால் வீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு 2 கற்களிலுமே பலன்களும் குறைகளும் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow