Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்?
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத்துக்கு செய்யும் மசாஜ்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா லட்சுமண்
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.
What's Your Reaction?