காதல் தோல்வி குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன்.. அந்த பெண் யார் தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது எஸ்கே 23 மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

Feb 13, 2025 - 15:27
Feb 13, 2025 - 15:10
 0  2
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன்.. அந்த பெண் யார் தெரியுமா

இதில் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், வருகிற 17ம் தேதி எஸ்கே 23ம் படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறிய விஷயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதில் தனது முதல் காதல் தோல்வி குறித்து அவர் பேசியுள்ளார்.

முதல் காதல் தோல்வி

சிவகார்த்திகேயன் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தாராம். ஆனால், இது ஒருதலை காதல் என்பதால் கைகூடவில்லையாம். மேலும் அந்த பெண் அவரது காதலருடன் சென்றுவிட்டதால், தனது காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும், தன் வாழ்க்கையில் இருந்தே ஒரே காதல் அதுதான் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின், விஜய் டிவியில் வேலைபார்க்கும் போது, ஷாப்பிங் மால் ஒன்றில் அந்த பெண்ணை எதிர்ச்சியாக சிவகார்த்திகேயன் பார்த்தாராம். ஆனால் அந்த பெண் முன்பு காதலித்த பையனோடு இல்லாமல், வேறொரு நபருடன் வந்திருந்தாராம். இதைபார்த்ததும், நமக்கு கிடைக்காத பெண், அவனுக்கும் கிடைக்கவில்லை என மகிழ்த்தியடைந்ததாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0