துப்பாக்கி 2 ரெடி.. தயாரிப்பாளர் தாணு சொன்ன மாஸ் தகவல்

Jan 1, 2025 - 22:42
Jan 1, 2025 - 21:41
 0  11
துப்பாக்கி 2 ரெடி.. தயாரிப்பாளர் தாணு சொன்ன மாஸ் தகவல்

துப்பாக்கி

2012ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் துப்பாக்கி. இது அவருடைய கம் பேக் ஆகவும் அமைந்தது.

ஆக்ஷன் கதைக்களத்தில் வித்தியாசமான திரைக்கதையில் இப்படத்தை மிரட்டியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படத்தில் காஜல் அகர்வால் வித்யுத் ஜம்வால், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்திருந்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில் முதன் முதலில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமும் இதுவே ஆகும்

துப்பாக்கி 2 

ப்ளாக் பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும். அப்படி விஜய் ரசிகர்களால் கேட்கப்படும் கேள்வி, துப்பாக்கி 2 எப்போது என்பது தான்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், துப்பாக்கி 2 குறித்து பேசியுள்ளார். அவர் "இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட துப்பாக்கி 2  தொடரலாம் என ஏ.ஆர். முருகதாஸ் சொன்னார், தப்பி கூப்பிடும் போது தாராளமாக எடுக்கலாம் என நான் சொன்னேன்" என அவர் கூறியுள்ளார்.

ஆனால், விஜய் தனது கடைசி படம் தளபதி 69 தான் என அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow