பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2000.. தாயுமானவர் திட்டத்தில் அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!
தமிழ்நாட்டில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2025 - 2026 நிதி நிலை அறிக்கையில் மகளிர், பள்ளிக் குழந்தைகள், தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தப்படி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தாயுமானவர் திட்டம்
தாயுமானவர் திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடரும் வகையில் இந்த 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது..
யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?
தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்று திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த தாயுமானவர் திட்டத்தின் கீழ் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும் எனும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்புக்கு பிறகு?
இந்த குழந்தைகள் பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசின் 2025 - 2026 நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
மாணவர்கள் பயன்பெறும் வகையில் 152 கோடி மதிப்பில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 100 கோடி ரூபாயில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் சென்னை மற்றும் கோவையில் 100 கோடி ரூபாய் செலவில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?






